ETV Bharat / state

பொறியியல் படிப்பு ஆன்லைன் கலந்தாய்வுக்காக சாப்ட்வேர் உருவாக்க உத்தரவு! - பொறியியல் படிப்பு ஆன்லைன் கலந்தாய்வுக்காக சாப்ட்வேர் உருவாக்க உத்தரவு

சென்னை: பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக ஆன்லைன் கலந்தாய்வுப் பணிகளுக்கான மென்பொருளை வடிவமைக்க உயர் கல்வித் துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Order to develop software for engineering online counselling

author img

By

Published : Apr 8, 2020, 12:11 PM IST

பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை நடத்துவதற்கான முகமையாக அண்ணா பல்கலைக்கழகதத்திற்கு உயர் கல்வித் துறை அனுமதியளித்தது. அதனைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரடிக் கலந்தாய்வு 2017-18ஆம் கல்வியாண்டு வரை நடைபெற்று வந்தது.

அடுத்தக் கல்வியாண்டில் (2018-19) அரசின் வழிகாட்டுதலின்படி, முதல் முறையாக ஆன்லைன் கலந்தாய்வினை அண்ணா பல்கலைக் கழகம் நடத்தியது. இதன்பிறகு, தமிழ்நாடு இளங்கலை பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழுவை அரசு மாற்றி அமைத்தது. அதில் தனக்கு வழங்கப்பட்ட பதவியினை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா ஏற்க மறுத்ததுடன், பல்கலைக்கழகத்திலிருந்து நியமிக்கப்பட்ட மற்ற உறுப்பினர்களையும் கலந்தாய்வுப் பணியில் ஈடுபடக் கூடாது என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் 2019-20ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கையை ஆன்லைன் மூலம் நடத்தியது. அப்போது தனியார் நிறுவனத்தின் உதவியுடன் ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், உயர் கல்வித் துறைச் செயலர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில், ”பொறியியல் படிப்பில் 2007ஆம் ஆண்டு முதல் ஒற்றைசாளர முறையில் மாணவர்கள் சேர்க்கையை அரசு நடத்தி வருகிறது.

கடந்த ஆண்டு தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்தின் மூலம் இளங்கலை மற்றும் முதுகலைக் கலந்தாய்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. எனவே 2020-21ஆம் கல்வியாண்டில் மாணவர்களைச் சேர்ப்பதற்குத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்திற்குத் தனியாக மென்பொருளை (சாப்ட்வேர்) உருவாக்க வேண்டும்.

அந்த மென்பொருளைக் கண்காணித்து சரிபார்க்கவும் குழு அமைக்கப்படுகிறது. அந்தக் குழுவின் தலைவராக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், முதன்மைச் செயலருமான குமார் ஜெயந்த், உறுப்பினர்களாக தமிழ்நாடு கைத்தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர், மேலாண்மை இயக்குநர் சந்தோஷ்குமார், தமிழ்நாடு மின்ஆளுமை நிறுவனத்தின் ஆணையர் சந்தோஷ் கே. மிஸ்ரா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் இருப்பதால், மாணவர்களுக்கான கலந்தாய்வுப் பணிகள் மேலும் காலதாமதாகும் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: கரோனா வார்டாக மாறிய அரசு பொறியியல் கல்லூரியில் திடீர் ஆய்வு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.