இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘’நினைவுச் சின்னங்கள் அனைத்தையும் பாதுகாக்க மாமல்லபுரம் உலக புராதனப் பகுதி மேலாண்மை ஆணையத்தை எட்டு வாரங்களில் அமைக்க வேண்டும்.
மேலும்,17 பேர் கொண்ட குழுவில் இந்திய, மாநில தொல்லியல் துறை பிரதிநிதிகள், வரலாற்று அறிஞர்கள், பொதுப்பணித் துறை பிரதிநிதிகள், இணை ஆணையருக்கு இணையான அறநிலையத் துறை அலுவலர்கள், தகுதியான ஸ்தபதி, ஆகம சிற்ப சாஸ்திர வல்லுநர்கள் உள்ளிட்டோர் இடம்பெற வேண்டும் என வழிகாட்டி உள்ளது.
இதையடுத்து, குழுவின் ஒப்புதல் இல்லாமல் மத்திய, மாநில சட்டங்களின்கீழ் அறிவிக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், கோயில்கள், சிலைகள், சிற்பங்கள், சுவர் சித்திரங்களில் எந்த மாற்றமும் சரிபார்க்கும் பணியும் மேற்கொள்ளக் கூடாது.
சென்னை உயர் நீதிமன்றம் கோயில்கள், புராதன சின்னங்களைப் பாதுகாக்க அதிரடி உத்தரவுகளை வழங்கியுள்ளது, பாரதிய ஜனதா கட்சி சார்பில் பெரிதும் வரவேற்று பாராட்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் 50 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதி