ETV Bharat / state

ஆராக்கிய வாழ்விற்கு அழைத்த இயற்கை உணவுகள் சந்தை!

சென்னை: இயற்கை உணவுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வள்ளுவர் கோட்டத்தில் இயற்கை உணவு சந்தை நேற்று நடத்தப்பட்டது. இதில் ஆர்வமுடன் பொதுமக்கள், தங்களுக்கு பிடித்தவற்றை வாங்கி சென்றனர்.

Oraganic Food market in valluvar kottam
author img

By

Published : May 13, 2019, 9:59 AM IST

Updated : May 13, 2019, 11:48 AM IST

பொதுவாகவே தமிழர் உணவு பழக்கவழக்கம் பெரிதும் போற்றப்பட்டவை. இதனால்தான் நம் முன்னோர்கள் நோய்களின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால், தற்போது பிறக்கும் குழந்தைகூட நோயுடன் பிறக்கிறது. இதற்கு நம் உணவு பழக்கத்தில் ஏற்பட்டு வரும் மாற்றமே காரணம்.

இந்நிலையில், இயற்கை உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நேற்று இயற்கை உணவு சந்தை நடத்தப்பட்டது.

இது குறித்து சந்தையின் ஒருங்கிணைப்பாளர் இசைமொழி கூறுகையில், 'சென்னையில் சந்தை' எனும் அமைப்பு, கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்களால் உருவாக்கப்பட்டது.

"இந்த அமைப்பு மூலம் மாதத்தின் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் இயற்கை உணவு சந்தை சென்னையில் நடத்தப்படுகிறது. பொதுமக்களின் உடல் நல்வாழ்வுதான் இதற்கு முக்கிய நோக்கம். இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய், சர்க்கரை வியாதி போன்ற நோய்கள் வருவதற்கு உணவு முறைகள்தான் காரணம். நம்முடைய பாரம்பரிய உணவு முறைகளை மறந்ததால், பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளோம். விவசாயமும், சிறு வணிகர்களின் வாழ்க்கை நலிவடைந்து வருகிறது. அவர்களை மேம்படுத்துவதன் மூலம் தமிழ்நாட்டில் தற்சார்பு நிலையும், பொருளாதார நிலையும் உயரும்.

இதனைக் கருத்தில் கொண்டு ஆரம்பித்தது தான் இந்த சந்தை. இந்த சந்தையில் இயற்கையான முறையில் விளைந்த அரிசிகள், பருப்பு வகைகள், சிறுதானிய வகைகள், நாட்டுப் பழங்கள், நாட்டுக் காய்கறிகள், கீரை வகைகள், செடி வகைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. மக்கள் தங்கள் உடல் நலத்தைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றவும் இயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட இயற்கை உணவுகளை வாங்க வேண்டும்", என்றார்.

Intro:Body:

மக்கள் ஆதரவு கொடுத்தால் இயற்கை உணவின் விலை குறையும் நாமும் ஆரோக்கியமாக வாழலாம், விவசாயமும் செலிக்கும்.

நாளுக்கு நாள் நம் உணவு பழக்க வழக்கத்தில் பெரிய அளவு மாற்றம் நேர்ந்து வருகிறது. உலகின் வேகத்துக்கு ஈடு கொடுக்க நமது உணவையும் எளிது படுத்த விரும்புகிறோம் தவிர ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்ள தவறி வருகிறோம். குறிப்பாக நூடில்ஸ், பிரை பூட், பீசா, பர்கர் போன்ற  விரைவாக சமைக்கும் உணவுகளை அதிக அளவு விரும்புகின்றனர். இது போல் உணவு உடலை பெரிது அளவு பாதிக்கிறது என பல ஆய்வுகள் கூறுகிறது.

பொதுவாகவே தமிழர் உணவு பழக்க வழக்கம்  பெரிதும் போற்றப்பட்டவை. முன்னர் நோய், மருத்துவமனை என்றால் நம் முன்னோர்கள் ஆச்சரியம் அடைவார்கள். ஆனால் தற்பொழுது பிறக்கும் குழந்தை நோய்யுடன் பிறக்கும் அவலம் உள்ளது. இதற்கு பெரிதும் நம் உணவு பழக்கத்தில் ஏற்பட்டு வரும் மாற்றமே காரணம். 

சிறுதானிய உணவுகள் மற்றும் இயற்கையான நாட்டு சக்கரை, கலப்படம் இல்லாத காய்கறிகள், முட்டை, அரிய வகை பாலிஸ் இல்லாத அரிசி, பருப்பு போன்றவை நம் உடலை பாதுக்காக்க பெரிதும் உதவுகிறது. இது போல் இயற்கை உணவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை முதல் மாலை வரை இயற்கை உணவு சந்தை தனியார் தொண்டு நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளது. 

இதை பற்றி சந்தையின் ஒருங்கினைப்பாளர் இசைமொழி பேட்டி அளிக்கையில், 

சென்னையில் சந்தை என்கிற இந்த அமைப்பு கல்லூரி மாணவர்களாலும், பெண்களாலும் நடத்தப்படுகிறது. கடந்த மாதம் இதை முதல் முறையாக தொடங்கினோம். 

ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் அல்லது இரண்டாவது வாரத்தில் இந்த சந்தை சென்னையில் நடத்தப்படும். இந்த சந்தையின் முக்கிய நோக்கம் பொதுமக்களின் உடல்  நல்வாழ்வு. இன்றைய காலகட்டத்தில் பல்வேறு நோய்கள், கேன்சர், சக்கரை வியாதி, உப்பு போன்றவை எல்லாமே வர காரணம் நமது உணவுமுறைகள் தான். நம்முடைய பாரம்பரிய உணவு முறைகளை மறந்த காரணத்தால் தான் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகியுள்ளோம். இதை மாற்ற வேண்டும். 

அதே சமயம் விவசாயமும்,  சிறுவணிகர்களின் வாழ்க்கையும் நலிவடைந்து கிடக்கின்றது.

மக்கள் நலம் , விவசாயிகள் நலம் , சிறுவணிகர்கள் நலம் இதை மேம்படுத்துவதன் மூலம் தமிழ்நாட்டின் தற்சார்பு நிலையும், பொருளாதார நிலையும் உயரும். 

இதை கருத்தில் கொண்டு ஆரம்பித்தது தான் இந்த சந்தை. இந்த சந்தையில் இயற்கையில் விளைந்த வேளாண் அரிசிகள், பருப்பு வகைகள், சிறுதானிய வகைகள் போன்றவை கிடைக்கும். நாட்டு பழங்கள் மற்றும் நாட்டு காய்கறிகள், கீரைவகைகள், செடிவகைகள் கூட இங்கு விற்பனைக்கு உள்ளது.

மக்கள் தங்கள் உடல் நலத்தை பாதுகாக்கவும், விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றவும் இயற்கையாக உற்பத்தி செய்யபட்ட பொருட்களை இந்த சந்தையில் வாங்குமாறு கேட்டு கொள்கிறேன் என  கூறினார்.

இந்த சந்தையில் பொருட்கள் வாங்கிய நபர் கூறுகையில், இந்த சந்தைக்கு குடும்பத்தோடுராயபுரத்தில் வந்திருக்கின்றேன். பொதுமக்கள் எல்லாரும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் இங்க கிடைக்கின்றன. என் நண்பர்கள் மூலமாக தான் நான் இங்கு வந்தேன். மிகவும் சிறப்பாக இருக்கின்றது. 

Conclusion:
Last Updated : May 13, 2019, 11:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.