சென்னை: இந்திய சட்ட ஆணையம் அதிமுகவின் பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு கடிதம் அனுப்பியது தவறானது என ஓபிஎஸ் தரப்பினர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகுவை நேரில் சந்தித்து முறையீடு செய்துள்ளனர்.
இந்திய சட்ட ஆணையம் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக, அதிமுகவின் கருத்தை கேட்பதற்காக அதிமுக தலைமை அலுவலக பெயரில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு, நேற்று கடிதம் அனுப்பி இருந்தது.
இந்நிலையில் முன்னாள் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை நேரில் சந்தித்து, இந்திய சட்ட ஆணையம் தவறு செய்திருப்பதை சுட்டிக்காட்டி, இணையதள வழியாக இந்திய சட்ட ஆணையத்திற்கு அனுப்பிய புகார் கடிதத்தையும், இந்திய தேர்தல் ஆணையம் அதிமுக தொடர்பாக முடிவு செய்யாத நிலையில் இது தவறாக அனுப்பப்பட்டுள்ளது எனவும் கடிதம் கொடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ’அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி காலாவதியான நிலையில் தவறாக இந்திய சட்ட ஆணையம் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், மேலும் அதிமுக தலைமை அலுவலக கதவு எண்ணிற்கு பதில் வேறு ஒரு கதவு எண் அதில் இருப்பதாகவும், இதுபோல் பொதுசெயலாளர் என குறிப்பிட்டு கடிதம் அனுப்பினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். எனவே இதுபோன்று தவறு நடக்க கூடாது’ என அவர் கூறினார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டையும், தமிழர்களையும் செழிக்க வைப்பதே திராவிட மாடல்: முதலமைச்சர்