ETV Bharat / state

14 விழுக்காடு அகவிலைப்படியை தீபாவளி பரிசாக வழங்க வேண்டும்- மு.க. ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கோரிக்கை - அகவிலைப்படி

ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான 14 சதவீதம் அகவிலைப்படியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீபாவளி பரிசாக உடனடியாக வழங்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

OPS statement  da to government servant  ops statement on da government servant  da to government servant  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  ஓபிஎஸ் அறிக்கை  அறிக்கை  ஓபிஎஸ்  அகவிலைப்படி  அகவிலைப்படி குறித்து ஓபிஎஸ் அறிக்கை
ஓபிஎஸ்
author img

By

Published : Oct 22, 2021, 1:06 PM IST

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அரசு நிறுத்தி வைப்பது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல. ஆகையால் ஊழியர்களுக்கு 14 விழுக்காடு அகவிலைப்படியை தீபாவளி பரிசாக தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என அதிமுக ஒருங்கினைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “அரசால் தீட்டப்படும் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், அரசின் நலத் திட்ட உதவிகளை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதிலும், இயற்கை பேரிடர்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், அரசின் வளர்ச்சி நோக்கங்களை எய்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் பொதுச் சேவையை நடைமுறைப்படுத்துவதிலும் அடித்தளமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள்.

இதேபோன்று, நம் நாட்டு மக்கள் அனைவரும் கண்ணுடையவர்களாக விளங்கினால்தான் நம் நாடு முன்னேற்றம் அடையும் என்பதன் அடிப்படையில், அழியாச் செல்வமாம் கல்விச் செல்வத்தை மாணவ, மாணவியருக்கு போதித்து, அவர்களை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் ஆக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் ஆசிரியர்கள்.

ஓய்வூதியத்தை உயர்த்திய அரசு அதிமுக

இப்படிப்பட்ட பணிகளை மேற்கொள்ளும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்ததால் தான், ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் எப்பொழுதெல்லாம் அகவிலைப்படியை அறிவிக்கின்றதோ அப்பொழுதெல்லாம் அதனை மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாார்களுக்கும் அளித்த அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு.

இது மட்டுமல்லாமல், 15,000 கோடி ரூபாய் செலவில் ஊதியக் குழு பரிந்துரைப்படி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியத்தையும் உயர்த்திய அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் 2011 முதல் 2021 வரையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ரொக்கமாக வழங்கப்பட்டு வந்தது.

2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பின் தி.மு.க. ஆட்சி அமைந்ததிலிருந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிலைமை பரிதாபத்திற்குள்ளாகி வருகிறது.

அகவிலைப்படி

ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11 விழுக்காடு அகவிலைப்படியை ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஜூலை ஒன்று முதல் அளித்தபோது, அதனை மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விரிவுபடுத்தாமல் அடுத்த ஆண்டு ஏப்ரல் ஒன்று முதல் வழங்கப்படும் என்று தி.மு.க. அரசு அறிவித்தது.

பின்னர், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் தொடர் வலியுறுத்தலைத் தொடர்ந்து, மூன்று மாதங்கள் முன்னதாக, அதாவது 2022 ஜனவரி ஒன்று முதல் வழங்கப்படும் என்று தி.மு.க. அரசு அறிவித்தது.

இந்தச் சூழ்நிலையில், தீபாவளி பரிசாக, ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஜூலை 1 முதல் மேலும் 3 விழுக்காடு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியுள்ளது. அதாவது, இந்தாண்டு ஜூலை ஒன்று முதல் 31 விழுக்காடு அகவிலைப்படியை ஒன்றிய அரசு ஊழியர்கள் பெறப் போகிறார்கள்.

தீபாவளி பரிசாக வழங்க வேண்டும்

ஆனால், மாநில அரசு ஊழியர்கள் 17 விழுக்காடு அகவிலைப்படியைத் தான் பெற்று வருகிறார்கள். ஒன்றிய அரசு ஊழியர்களுக்கும், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்குமான அகவிலைப்படி வித்தியாசம் 14 விழுக்காடு. இந்த 14 விழுக்காடு அகவிலைப்படியை தீபாவளி பரிசாக தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்பதே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தேர்தலுக்கு முன் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, தேர்தலுக்குப் பின் விலைவாசி உயர்வை ஓரளவு ஈடுகட்ட வழங்கப்படும் அகவிலைப்படியையே நிறுத்தி வைப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

எனவே, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசாக அகவிலைப்படியை அளித்ததுபோல், மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான 14 விழுக்காடு அகவிலைப்படியை தீபாவளிப் பரிசாக உடனே வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: அமித் ஷாவுடன் சந்திப்பா? டெல்லி செல்கிறார் தமிழ்நாடு ஆளுநர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.