ETV Bharat / state

மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஸ்டாலின் உத்தரவாதம் வழங்க வேண்டும் - ஓபிஎஸ்

முதலமைச்சர் ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உதவியைப் பெற்று மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

ops-statement-for-fishers
ops-statement-for-fishers
author img

By

Published : Jul 19, 2021, 6:26 PM IST

சென்னை: ராமநாதபுரம் மாவட்ட ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 300-க்கும் குறைவான படகுகளில் ஜூலை 17ஆம் தேதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். மீனவர்கள் தனுஷ்கோடிக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் ராட்சத விளக்குகளைக் கொண்டு அச்சுறுத்தி விரட்டியடித்துள்ளனர்.

பின்னர் அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் வலைகளை வெட்டி சேதப்படுத்தியதால், மீனவர்கள் மீன் பிடிக்காமல் நஷ்டத்துடன் கரை திரும்பினர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிப்புத் தெரிவித்துவருகின்றனர்.

இன்னல்களை சந்தித்துவரும் மீனவர்கள்

இது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அந்நியச் செலாவணியை ஈட்டுவதிலும், புரதச் சத்துள்ள உணவைப் பெருக்குவதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் தொழில் மீன்பிடித் தொழில் என்றாலும், அந்தத் தொழிலை மேற்கொண்டுவரும் தமிழ்நாடு மீனவர்கள் பல்வேறு இன்னல்களை, குறிப்பாக இலங்கை கடற்படையினரால் சந்தித்துவருகிறார்கள்.

எனவே, மீன் உற்பத்தியினைப் பெருக்குவது என்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வதும் தமிழ்நாடு அரசின் கடமையாகும். மீன்பிடித் தடைக்காலம் முடிந்து, கடந்த மாதம் 30ஆம் தேதி அன்றுதான் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

அப்போதிருந்தே தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படும், சம்பவங்களும், அவர்களுடைய வலைகள் அறுத்து கடலில் வீசியெறியப்படும் சம்பவங்களும், தொடர்ச்சியாக நடைபெற்றுவருவதாகத் தகவல்கள் வருகின்றன.

மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள நடவடிக்கை

இலங்கைக் கடற்படையினரின் இதுபோன்ற செயல் மீனவ மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதோடு மட்டுமல்லாமல், அவர்களின் வருமானமும் குறைந்துவருகிறது. இலங்கைக் கடற்படையினரின் தொந்தரவு இல்லாமல் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எனவே முதலமைச்சர் இதில் உரிய கவனம் செலுத்தி இலங்கைக் கடற்படையினரின் தொல்லை இல்லாமல் மீனவ மக்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்படின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உதவியைப் பெற்று மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.