ETV Bharat / state

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து ‘நாளை விரிவாக பேசுகிறேன்’ - ஓபிஎஸ் - அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்

எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து நாளை விரிவாகப் பேசுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 17, 2023, 11:00 PM IST

சென்னை: அதிமுகவின் ஒற்றைத் தலைமை யுத்தத்தில் ஈபிஎஸ் வென்றதையடுத்து அடுத்தகட்டமாக பொதுச்செயலாளர் தேர்தலை வருகின்ற 26ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர். கடந்த மாதம் 24ஆம் தேதி ஓபிஎஸ்ஸின் தாயார் பழனியம்மாள் வயது மூப்பின் காரணமாக காலமானார். அன்றில் இருந்து தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் ஓபிஎஸ் இருந்தார்.

அங்கிருந்து பல அரசியல் நகர்வுகளை மேற்கொண்ட அவர், நேற்று (மார்ச் 16) இரவு சென்னைக்கு வந்தார். ஓபிஎஸ்ஸின் தாயார் மறைந்த அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பாக ஐ. பெரியசாமி அங்கு சென்று மரியாதை செலுத்தி வந்தார். இந்த நிலையில் சென்னை வந்த ஓபிஎஸ்ஸை சந்தித்து முதலமைச்சர் தனது ஆறுதலை தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "ஓபிஎஸ்ஸின் தாயார் மறைவிற்கு ஆறுதல் தெரிவித்தோம்" எனக் கூறினார். இதன் தொடர்ச்சியாக சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தனது வீட்டில் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு ஓ. பன்னீர்செல்வம் இலவச சேலைகளை வழங்கினார்.

இந்த நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், "என் தாயார் மறைவுக்கு துக்கம் விசாரிக்கவே முதலமைச்சரும், அமைச்சர்களும் என் இல்லத்திற்கு வந்தார்கள். அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் கூறினார். ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பு ஓபிஎஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு தொடர்பாக ஈபிஎஸ்ஸின் கோரிக்கைகளை ஏற்கக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக உரிமையியல் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுச்செயலாளர் தேர்தல், புதிய உறுப்பினர் அட்டை வழங்குதல் போன்ற பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவோருக்கு 10 மாவட்ட செயலாளர் முன்மொழிய வேண்டும் எனவும்; 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் எனவும்; தலைமை கழக நிர்வாகியாக 5 ஆண்டுகள் இருந்திருக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஓபிஎஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும் ஆரம்பம் முதலே எடப்பாடி பழனிசாமி சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டினார். இந்த நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து பேசிய ஓபிஎஸ், "அண்ணா திமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக எடப்பாடி வெளியிட்ட அறிவிப்பு குறித்து நாளை விரிவாக பேசுகிறேன்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: வரும் மார்ச் 26ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.