ETV Bharat / state

சர்ச்சையான தேர்தல் அறிக்கை : மௌனம் சாதித்த ஓபிஎஸ்

author img

By

Published : Mar 18, 2021, 6:27 PM IST

சென்னை: அதிமுக, திமுகவின் தேர்தல் அறிக்கையைக் காப்பி அடித்துள்ளதாக எழும் குற்றச்சாட்டு குறித்து துணை முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பியபோது, அதிமுக நிர்வாகி ஒருவர் செய்தியாளரை மிரட்டியிருக்கிறார்.

மௌனம் சாதித்த ஓபிஎஸ்.
மௌனம் சாதித்த ஓபிஎஸ்.

தேனி மாவட்டத்தில் போடி தொகுதி வேட்பாளராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இதனிடையே, சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக, மதுரையில் இருந்து சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்று முதல் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தீவிர பரப்புரை மேற்கொள்ளப்போவதாகத் தெரிவித்தார்.

அதிமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்து எழுப்பிய கேள்விக்கு,’வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது என நம்பிக்கையுடன் பதிலளித்தார்.

மௌனம் சாதித்த ஓபிஎஸ்..செய்தியாளரை மிரட்டிய அதிமுக நிர்வாகி!

தொடர்ந்து, திமுகவின் தேர்தல் அறிக்கையை அதிமுக காப்பி அடித்துள்ளதாக எழும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் மௌனமாக அவ்விடத்திலிருந்து நகர்ந்தார்.

அப்போது துணை முதலமைச்சரை வரவேற்க வந்த அதிமுக நிர்வாகி ஒருவர், இது போன்ற கேள்வியைக் கேட்காதீர்கள் என செய்தியாளரை மிரட்டியுள்ளார்.

இதையும் படிங்க:'திமுகவிற்கான வெற்றிக் கதவுகள் மூடப்பட்டுவிட்டன'- முதலமைச்சர் பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.