ETV Bharat / state

"ஜூலை 11 அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்" - ஓபிஎஸ் மனுத்தாக்கல் - madras high court

ஜூலை 11ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி, ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஓபிஎஸ் மனுத்தாக்கல்
ஓபிஎஸ் மனுத்தாக்கல்
author img

By

Published : Jul 5, 2022, 7:44 PM IST

சென்னை : ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்களை நிராகரித்ததுடன், கட்சியின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமித்தும், அடுத்த பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடத்தப்படும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அவர் தனது மனுவில், கட்சியில் எந்த விவாதமும் நடத்தாமல், ஒற்றைத் தலைமை கொண்டு வரும் வகையில் ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற இருந்ததால் அதை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு தொடர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை மீறி, ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்களை நிராகரித்ததுடன், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அனுமதியில்லாமல் தமிழ்மகன் உசேனை நிரந்தர அவை தலைவராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

அதேபோல ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு நடத்தப்படும் என அவைத்தலைவர் அறிவித்தது கட்சி விதிகளுக்கு முரணானது எனவும், கட்சி விதிகளின்படி பொதுக்குழு, செயற்குழு உள்ளிட்ட எந்த கூட்டங்களை கூட்டுவதாக இருந்தாலும் அதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அவசியம் என தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தவிர வேறு எவருக்கும் பொதுக்குழுவை கூட்ட அதிகாரமில்லை எனவும், இரு பதவிகளின் அதிகாரத்தை அவைத்தலைவரோ, தலைமைக் கழக நிர்வாகிகளோ பறித்துக் கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார்.

ஒற்றைத் தலைமை கொண்டு வரும் வகையில் ஜூலை 11ல் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வர முயற்சிப்பதாகவும், அது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்படாததால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தொடர்ந்து செயல்பட முடியாது எனக் கூறி, இரு பதவிகளின் அதிகாரத்தை தலைமைக் கழக நிர்வாகிகள் பறித்துக் கொள்ள முடியாது எனவும் ஜூன் 23ல் இரு பதவிகளுக்கும் ஒப்புதல் கோரி எந்த தீர்மானங்களும் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் ஜூலை 11ல் கூட்டப்படும் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வருவதற்கு எந்த உரிமையும் கிடையாது - ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.