ETV Bharat / state

நாங்குநேரி சம்பவம்: வருங்கால சமுதாயத்தினரின் வாழ்வை சீர்குலைக்கும் திமுக - ஓபிஎஸ் குற்றச்சாட்டு! - dmk

மாணவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்காமல் பிரிவினையை ஏற்படுத்தி, வருங்கால சமுதாயத்தினரின் வளமான வாழ்வினை திமுக சீர்குலைத்துக் கொண்டிருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

ops
ஓபிஎஸ்
author img

By

Published : Aug 13, 2023, 12:17 PM IST

சென்னை: இது தொடர்பாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சாதி இரண்டொழிய வேறில்லை என்றார், ஔவை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார், வள்ளுவர். அதாவது, மனிதர்களின் பிறப்பினால் உயர்வு, தாழ்வு கிடையாது என்றார். சாதிகள் இல்லையடி பாப்பா என்றார், மகாகவி. உயர்சாதி, கீழ்சாதி என்னும் வேற்றுமைகள் தமிழுக்கு இல்லை, தமிழருக்கும் இல்லை. பொய்க் கூற்றே சாதி அனல் என்றார், பாரதிதாசன்.

இப்படிப்பட்ட தலைவர்கள் பிறந்த நாட்டில் சாதியினால் வன்முறைகள் நிகழ்வதும், குறிப்பாக எதிர்கால சந்ததியினர் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதும் நொடர்ந்து நிகழ்வது என்பது மிகவும் கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகும். மேலும், 2006-2011 திமுக ஆட்சியைப் போல, கடந்த 27 மாத கால திமுக ஆட்சியிலும் சாதிய மோதல்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தற்போது நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் அரசு உதவி பெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் சின்னத்துரையை, சக மாணவர்கள் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.

  • பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவியரிடையே ஒற்றுமையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்காமல் பிரிவினையை ஏற்படுத்தி, வருங்கால சமுதாயத்தினரின் வளமான வாழ்வினை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம். pic.twitter.com/3dzKSict2g

    — O Panneerselvam (@OfficeOfOPS) August 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதன் காரணமாக அந்த மாணவர் பள்ளிக்குச் செல்லவில்லை என்றும், இது குறித்து பள்ளி ஆசிரியை மாணவரின் தாயிடம் பேசி பள்ளிக்கு வரச் சொன்னதாகவும், அந்த மாணவனுக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய சக மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்ததாகவும், இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், அந்த மாணவரை வீடு புகுந்து கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதில், அவர் படுகாயமடைந்ததாகவும், இதைத் தடுக்க வந்த அவரது சகோதரியும் படுகாயமடைந்ததாகவும், இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

இதனைப் பார்த்த சின்னத்துரையின் தாத்தா கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்துள்ளார். இந்த தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. மாணவர்களின் எதிர்காலத்திற்கு அச்சாரமாக விளங்கக்கூடிய பள்ளிகளில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது மிகவும் கவலை அளிக்கத்தக்கது.

மேலும், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டுமென்ற என் விருப்பத்தினைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களுக்குத் தேவையான உரிய மருத்துவ சிகிக்சை அளிக்கப்பட வேண்டும் என்றும், தேவையான நிதி உதவியை அரசு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், பள்ளிகளில் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்று நிலவிய நிலை மாறியுள்ளதுதான் இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம். இதனைத் தவிர்க்க தேசப்பற்று, மனித நேயம், மனிதாபிமானம், நீதி போதனைகள் ஆகியவற்றை பள்ளிகளில் ஆசிரியர்கள் போதித்து, மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வினை ஏற்படுத்த வேண்டும்.

கல்வித் துறையை கற்பித்தல், ஆசிரியர்-மாணவர் உறவு முறையைப் பலப்படுத்தத் தேவையான, உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கான பொறுப்பு மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், பெற்றோர், ஊர்ப் பொதுமக்கள் என அனைவருக்கும் உண்டு. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கையைப் பின்பற்றினால் எதிர்கால சந்ததியினரின் வாழ்வு வளம் பெறும்.

மேலும், சட்டம்-ஒழுங்கை தன் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், உடனடியாகத் தலையிட்டு படுகாயமடைந்தவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கவும், தாக்கியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும், இது போன்ற நிகழ்வுகள் இனி வருங்காலங்களில் நிகழாமல் இருக்கவும் தேவையான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மத்தியப்பிரதேச அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு - பிரியங்கா காந்தி மீது வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.