சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (ஜூலை. 25) காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவரைத் தொடர்ந்து, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக முக்கிய நிர்வாகிகளும் டெல்லி சென்றனர்.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
இருவரும் ஒரே நாளில் தனித்தனியாக விமானத்தில் புறப்பட்டு டெல்லி சென்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
தமிழ்நாடு அரசியல் நிலவரம்
இந்த நிலையில் இன்று (ஜூலை.26) காலை 11 மணியளவில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சந்தித்துப் பேசினர். அப்போது அதிமுக விவகாரங்கள், தமிழ்நாடு அரசியல் நிலவரம் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.
இந்த சந்திப்பின் போது, தம்பிதுரை, எஸ்.பி.வேலுமணி மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம், ரவீந்திரநாத் எம்பி, உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: ‘அதிமுக அரசு வஞ்சித்து விட்டது’ - மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள்