சென்னை: தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கிய உடன் டிசம்பர் 27 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஜனவரி 5 ஆம் தேதி வெளியான ஊரடங்கு உத்தரவில், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் தேர்விற்கு படிப்பதற்காக ஜனவரி 5 முதல் 20 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஜனவரி 16 ஆம் தேதி வெளியான ஊரடங்கு உத்தரவில், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டது.
ஜனவரி 19 ஆம் தேதி 10, 12 ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த திருப்புதல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜன.27) அலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்பிற்கு அனுமதி அளிப்பது குறித்தும், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்பிற்கு அனுமதி அளிப்பது குறித்தும், தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி வகுப்பிற்கு அனுமதி அளிப்பது குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது.
இதையும் படிங்க: முதலமைச்சர் மீது சாட்டை துரைமுருகன் விமர்சனம்: நீதிமன்றத்தில் அரசு தரப்பு மேல்முறையீடு