ETV Bharat / state

ஏஐசிடிஇ புதிய அறிவிப்பு: கணிதம், வேதியியல் படிக்காதவர்கள் பொறியியல் படிக்க வாய்ப்பு.. - ஏஐசிடிஇ புதிய அறிவிப்பு

பொறியியல் படிப்புகளில் குறிப்பிட்ட பிரிவுகளில் சேர 12-ஆம் வகுப்பில் கணிதம், வேதியியல் ஆகிய பாடங்களை படித்து இருக்க வேண்டியதில்லை என்றும், பெரும்பாலான பொறியியல் படிப்பிற்கு கணிதம் கட்டாயமில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.

Opportunity for those who have not studied Mathematics Chemistry to study Engineeringகணிதம் படிக்காதவர்கள் பொறியியல் படிக்க வாய்ப்பு..
Opportunity for those who have not studied Mathematics Chemistry to study Engineering கணிதம் படிக்காதவர்கள் பொறியியல் படிக்க வாய்ப்பு..
author img

By

Published : Mar 30, 2022, 12:27 PM IST

சென்னை: பொறியியல் படிக்க 2022-2023 ம் கல்வியாண்டிற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் வெளியிட்டுள்ளது. அதில், பொறியியல் பிரிவில் உள்ள மூன்றில் ஒரு பங்கு படிப்புகளில் சேர கணிதம் கட்டாயமில்லை என தெரிவித்துள்ளது.

இதன் மூலம் 12ஆம் வகுப்பில் தொழிற்கல்வி பயின்ற மாணவர்களும் இனிவரும் காலத்தில் பொறியியல் படிப்புகளில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்பில் கணிதம் பயிலாத மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்த பிறகு முதல் இரண்டு பருவங்களில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களின் அடிப்படை Bridge course முறையில் கற்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

கணிதம் படிக்காதவர்கள் பொறியியல் படிக்க வாய்ப்பு..

மேலும், கணினி பொறியியல், மின் பொறியியல் மின்னணு பொறியியல் ஆகிய படிப்புகளுக்கு பன்னிரண்டாம் வகுப்பில் வேதியியல் படித்திருக்க வேண்டியதில்லை என்றும் தொழில்நுட்ப கல்விக் கழகம் தெரிவித்துள்ளது. வேளாண்மை பொறியியல், கட்டடக்கலை உயிர் தொழில்நுட்பவியல், உணவு பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேருவதற்குக் கணிதம் கட்டாயமில்லை என்றும் அறிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த 2021 மற்றும் 2022 ஆம் கல்வியாண்டிற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் வெளியிட்ட விதிமுறைகளில் இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை 12 ஆம் வகுப்பில் விருப்பப்பாடமாக மட்டும் படித்து இருந்தால் அனைத்து பொறியியல் படிப்புகளிலும் சேரலாம் என தெரிவித்திருந்தது. இதற்கு கல்வியாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

இந்தநிலையில், தற்போது அந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு குறிப்பிட்ட பொறியில் பாடப்பிரிவுகளில் மட்டும் கணிதம், வேதியியல் ஆகிய பாடங்களை பயிலாதவர்கள் பொறியியல் படிப்புகளில் சேரலாம் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறையில் அடங்கிய கையேட்டில் பல்வேறு புதிய தகவல்களையும் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: அப்போ வேலூர், இப்போ அம்பத்தூர்.. தொடர்ச்சியாக தீப்பற்றி எரிந்து வரும் எலக்ட்ரிக் பைக் .. அச்சத்தில் வாகன ஓட்டிகள்..

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.