சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ளாட்சித் தேர்தலுக்காக 200 வார்டுகளின் வாக்குச்சாவடி பட்டியல் வார்டுகள் வாரியாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில், ஆண் வாக்காளர்களுக்காக 135 வாக்குச் சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்காக 135 வாக்குச் சாவடிகளும், அனைத்து வாக்காளர்களுக்காக 5489 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 5759 வாக்குச் சாவடிகள் உள்ளன
இந்த வரைவு வாக்குச் சாவடி பட்டியல்கள் இன்று முதல் அனைத்து வார்டு அலுவலகங்களிலும், மண்டல அலுவலகங்களிலும், மாநகராட்சி அலுவலகத்திலும், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர் அலுவலகத்திலும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மாநகராட்சி இணை ஆணையர் சண்முகவேல் பாண்டியன் தலைமையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வெங்கடேஷ் பாபு(அதிமுக), நவாஷ் (காங்கிரஸ்),சம்பத் ஏழுமலை (இந்திய கம்யுனிஸ்ட் ) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது, அரசியல் கட்சிகளின் பிரதிநிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அவற்றை கவனத்தில் எடுத்துக்கொண்ட இணை ஆணையர், விரைவில் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.
இதையும் படிங்க: எந்தெந்தத் தேதிகளில் எந்தெந்தத் துறைகள்?: மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் குறித்த கால அட்டவணை