ETV Bharat / state

லாயிட்ஸ் காலனியில் வாடகை, பராமரிப்புக் கட்டணம் உயர்த்தியது ஏன்? - ஓ.பி.எஸ். பதில் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

சென்னை: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிகளில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான லாயிட்ஸ் காலனியில் வீடு வாடகை, பராமரிப்பு கட்டணம் ஆகியவை உயர்த்தியது குறித்து திமுக எம்எம்ஏ அன்பழகன் கேள்விக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்தார்.

opaneerselvam-answers-to-dmk-mla-angalagan-question-in-assembly

author img

By

Published : Mar 20, 2020, 3:50 PM IST

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான லாயிட்ஸ் காலனியிலுள்ள வீடுகளின் வாடகை, பராமரிப்பு கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியது குறித்து திமுக எம்எம்ஏ அன்பழகன் கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், ''தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் உள்ள தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனிநபர் குடியிருப்புகள் ஆகியவற்றில் பொது ஒதுக்கீட்டின் கீழ் மாத வாடகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்புகளில், சென்னை மாநகரில் 784 குடியிருப்புகளும் புறநகரில் 341 குடியிருப்புகளும் என மொத்தம் 1125 குடியிருப்புகள் உள்ளன.

மேற்கண்ட சென்னை மாநகரிலுள்ள 786 குடியிருப்புகளில் லாயிட்ஸ் காலனியில் உள்ள வாரியக் குடியிருப்பில் அமைந்திருக்கும் 290 குடியிருப்புகளும் அடங்கும். இவை பொதுமக்களுக்கு மாத வாடகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.

வாடகையை ஆண்டுதோறும் 10 விழுக்காடு உயர்த்தவும், பராமரிப்பு கட்டணத்தை 5 விழுக்காடு உயர்த்தவும் அனுமதித்து அரசு ஆணை வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பொது ஒதுக்கீடுதாரர்களால் தொடர்ந்த வழக்குகளில் 2018ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதியன்று அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கிலும் அரசுக்குச் சாதகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் ஏற்கனவே வாடகை உயர்வுக்கு ஆட்சேபனை தெரிவித்தவர்கள் உள்பட அரசு அலுவலர் குடியிருப்புகளிலுள்ள அனைத்து பொது வாடகை குடியிருப்புதாரர்களும் உயர்த்தப்பட்ட மாத வாடகையையும், பராமரிப்பு கட்டணத்தையும் செலுத்தி வருகின்றனர்.

இந்த அரசாணையின் அடிப்படையில் ஜுலை 2019 முதல் சென்னை மாநகரிலுள்ள அரசு அலுவலர் குடியிருப்புகளில் உள்ள பொது ஒதுக்கீடுதாரர்களிடம் சதுர அடி ஒன்றுக்கு 14.15 ரூபாய் வீதம் மாத வாடகையும், பராமரிப்பு கட்டணமாக மாதம் 1,100 ரூபாயும் வசூலிக்கப்படுகின்றன.

புறநகரைப் பொறுத்தமட்டிலும் அரசு அலுவலர் குடியிருப்புகளிலுள்ள பொது ஒதுக்கீடுதாரர்களிடம் சதுர அடிக்கு ஒன்றுக்கு 11.45 ரூபாய் வீதமும், பராமரிப்பு கட்டணமாக மாதம் 880 ரூபாய் வீதமும் வசூலிக்கப்படுகின்றன.

வாடகை, பராமரிப்பு கட்டணம் ஆகியவை நீங்கலாக பொது குடியிருப்புதாரர்களால் உபயோகப்படுத்தப்படும் தண்ணீருக்காக மாதந்தோறும் 200 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.

சென்னை மாநகரிலுள்ள தனியார் வாடகை வீடுகளுக்கு சந்தை மதிப்பாக சதுர அடி ஒன்றிற்கு தோராயமாக 25 ரூபாயாக உள்ளது. இதனை ஒப்பிடுகையில் வாரியக் குடியிருப்புகளுக்குத் தற்போது நிர்ணயிக்கப்பட்ட வாடகை மிகவும் குறைவானதே.

லாயிட்ஸ் காலனி பகுதியிலுள்ள அரசு அலுவலர் குடியிருப்பில் மொத்தம் 240 குடியிருப்புதாரர்கள் உள்ளனர். அவற்றில் 41 பொது வாடகை குடியிருப்புகள் உள்ளன. வாரிய வாடகை குடியிருப்பில் மொத்தம் 190 குடியிருப்புகள் உள்ளன. அவற்றில் 268 பொது வாடகை குடியிருப்பதாரர்கள் உள்ளன. தற்போது லாட்ய்ஸ் காலனி அரசு அலுவலர் குடியிருப்பில் உள்ள அனைத்து பொது வாடகை குடியிருப்புதாரர்களும் சதுர அடி ஒன்றுக்கு 14.15 ரூபாய் என்ற அடிப்படையில் மாத வாடகையையும், மாதம் ஒன்றுக்கு 1100 ரூபாய் வீதம் பராமரிப்பு கட்டணத்தையும் செலுத்தி வருகின்றனர்.

இதே திட்ட பகுதியில் குடியிருந்து வரும் வாரிய வாடகை பொது ஒதுக்கீடுதாரர்கள் சதுர அடி ஒன்றுக்கு வாடகையாக 4.88 ரூபாயும், பராமரிப்பு கட்டணமாக மாதம் ஒன்றுக்கு 250 ரூபாயும் செலுத்தி வந்தனர். ஒரே திட்ட பகுதியில் அமைந்துள்ள இரண்டு வகையான குடியிருப்புகளுக்கு முரண்பாடான நிலையில் வாடகை வசூல் செய்யப்பட்டு வந்ததை சமன்செய்யும் பொருட்டு, அரசு அலுவலர் பொது ஒதுக்கீட்டின் கீழ் உள்ள, ஒரே திட்ட பகுதியில் இருக்கக்கூடிய வாரிய குடியிருப்பைச் சேர்ந்த பொது வாடகை குடியிருப்புகளுக்கும் மேற்கூறிய விவரம் 2020ஆம் ஆண்டு முதல் மாத பராமரிப்பு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த உயர்வானது தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வாரிய வாடகை குடியிருப்புகளிலுள்ள பொது ஒதுக்கீடுதாரர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. லாயிட்ஸ் காலனி பராமரிப்புக்கு என தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் அமைக்கப்பட்ட பராமரிப்பு அலுவலகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

2019-2020ஆம் ஆண்டில் அரசு அலுவலர் வாடகை குடியிருப்பில் 19.67 லட்சம் ரூபாய் செலவில் பராமரிப்பு பணிகளும், வாரிய வாடகை குடியிருப்பில் 21.25 லட்சம் ரூபாய் செலவில் பராமரிப்பு பணிகளும், ரூ. 3.53 லட்சம் செலவில் சிறப்பு பழுது பார்க்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பிட்ட கால இடைவெளியில் தேவையான பராமரிப்பு பணிகள் முறையாகச் செய்வதற்கென பராமரிப்பு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.