ETV Bharat / state

தடையை மீறி ஆன்லைன் சூதாட்டம் நடத்தினால் சிறை : மசோதா நிறைவேறியது ! - தமிழக சட்டபேரவை

தமிழக சட்டபேரவையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டத்தை மீறி ஆன்லைன் சூதாட்டம் நடத்தினால், மூன்று மாதம் ஜெயில் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று அச்சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேறியது
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேறியது
author img

By

Published : Oct 19, 2022, 5:33 PM IST

சென்னை: தமிழக சட்டபேரவையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் சட்டமசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். அந்த சட்டமசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: குடிமக்களை சூதாட்டத்தின் விளைவுகளில் இருந்து பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.

ஆன்லைன் சூதாட்டம் மக்களின் மனநலத்தை பாதிப்பதோடு தனிப்பட்ட, குடும்ப, சமூக, தொழில் மற்றும் பொதுமக்களின் செயல்பாட்டின் பிற முக்கியப்பகுதிகளில் பாதிப்பை உருவாக்குகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் நுண்ணறிவுப்பலம், எழுதும் திறன் மற்றும் படைப்பாற்றல் ஆகியவை குறைகின்றன.

ஆன்லைன் விளையாட்டுக்களின் மூலம் இளைஞர்களிடையே ஆக்ரோசமான நடத்தையும், கண்பார்வை பாதிப்பு, சிந்தனைத்திறன், உற்பத்தித்திறன் குறைதல் போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன. இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையாதல் மட்டுமில்லாமல் குடும்பங்களின் அழிவுக்கும், தற்கொலை மரணங்களுக்கும் காரணமாகின்றன. மக்களின் உடல் நலத்தை மட்டுமல்லாமல் சமூக ஒழுங்கையும், பொது ஓழுங்கையும் சீர்குலைக்கிறது என்று நீதிபதி சந்துரு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி சந்துரு குழு, மின்னஞ்சல் மூலமாக 10 ஆயிரத்து 735 பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. இதில் 10 ஆயிரத்து 708 பேர் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தனர். அதனை செயல்படுத்த இணைய வழி விளையாட்டு அதிகார அமைப்பு அமைக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆன்லைன் விளையாட்டுக்கள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை நடத்திய ஆய்வில், 74 சதவீதம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கவனம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 67 சதவீதத்தினரின் கண்பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் 74 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்களின் அறிவுத்திறன், எழுதும் திறன், படைப்பாற்றல் திறன் மற்றமும், படைப்பாற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 76 சதவீதம் மாணவர்களின் சுயமதிப்பீட்டில் கணிசமான குறைபாடும், அவர்களின் கோபப்படும் தன்மையும், ஓழுங்கமின்மையும் அதிகரித்துள்ளதும் அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக அச்சட்டமசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்படுதல் அவசியம் என்றும், சட்டத்தை மீறி ஆன்லைன் சூதாட்டம் நடத்துகிறவர்களுக்கு மூன்று மாதம் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

ஊடகங்களில் விளம்பரம் செய்தால் ஒராண்டு சிறைத்தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதித்து தண்டிக்கப்படுவர். இரண்டாவது முறையாக அக்குற்றத்தை செய்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும், என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த சட்டமசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; எடப்பாடி மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.