தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலன்களைப் பாதுகாப்பதற்காகத் தமிழ்நாடு தொழிலாளர்நலத் துறையின் கீழ் 17 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் இயங்கிவருகின்றன. இந்த வாரியங்களில் தொழிலாளர்கள் தங்களை உறுப்பினர்களாகப் பதிவுசெய்யும் பொருட்டு, மாவட்ட அளவிலான தொழிலாளர் நலத்துறை உதவி ஆணைய (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகங்களுக்கு இதுவரை நேரடியாகச் செல்ல வேண்டியிருந்தது.
தற்போது கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், தொழிலாளர்கள் தங்களது விவரங்களைப் பதிவுசெய்துகொள்ள மாவட்ட அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுவந்தது.
இந்தச் சிரமத்தைப் போக்கும் விதமாக தொழிலாளர்கள், அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே இணையதளம் மூலம் https://labour.tn.gov.in என்ற இணையதள முகவரியில் மேற்படி 17 வாரியங்களிலும்
தங்களை உறுப்பினர்களாகப் பதிவுசெய்து கொள்ளும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாகப் பதிவுசெய்ய ஆன்லைன் வசதி! - தொழிலாளர் நலத்துறை
சென்னை: தொழிலாளர் நலவாரியங்களில் தொழிலாளர்கள் தங்களை உறுப்பினர்களாகப் பதிவுசெய்ய ஆன்லைன் வசதி ஏற்படுத்தியிருப்பதாக தொழிலாளர் நலத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.