ETV Bharat / state

தொடர்ந்து அதிகரிக்கும் வெங்காய விலை - onion price spikes high at Tamilnadu

பிற மாநிலங்களில் இருந்து வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதாலும், புரட்டாசி மாதத்தை ஒட்டி காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளதாலும் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.

வெங்காயம்
வெங்காயம்
author img

By

Published : Oct 7, 2020, 3:05 PM IST

சென்னை : கோயம்பேடு மொத்த விலை காய்கறி சந்தையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 42 ரூபாயாக உள்ளது. சாம்பார் வெங்காயத்தின் விலை, கிலோ 70 ரூபாயைக் கடந்துள்ளது. நகரின் சில்லறை விற்பனைக் கடைகளிலும், பல்பொருள் அங்காடிகளிலும் வெங்காயம் கிலோ 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், புரட்டாசி மாதம் என்பதால் சந்தையில் காய்கறிகளுக்கான தேவை அதிகரித்து வருவதன் காரணமாகவும் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்து வரும் நாள்களில் சரக்கு வரத்து அதிகரித்து வெங்காயத்தின் விலை சீரடையும் என்றும் வியாபாரிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனைக்கு அனுமதி வழங்கினால் காய்கறிகளின் விலை சற்று கட்டுக்குள் இருக்கும் என சில்லறை வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.