ETV Bharat / state

எப்போது குறையும் வெங்காயத்தின் விலை? அமைச்சர்கள் விளக்கம் - தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை

சென்னை: தொடர்ந்து உயர்ந்து வரும் வெங்காயத்தின் விலை உயர்வு தொடர்பாக அமைச்சர்கள் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

onion
author img

By

Published : Nov 6, 2019, 5:43 PM IST

Updated : Nov 6, 2019, 11:58 PM IST

’வெங்காயம்’ மக்கள் அதிக அளவில் தங்கள் உணவில் பயன்படுத்தும் ஒரு அத்தியாவசிய உணவுப் பொருளாகும். அடிக்கடி விலை ஏற்ற இறக்கத்தை சந்திப்பதால் வெங்காயத்தை சாதாரண மக்கள் அதிகவிலை கொடுத்து வாங்க முடியாத சூழல் நிலவுகிறது.

தலைநகர் சென்னையைப் பொருத்தவரையில், வெங்காயம் 30 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திர மாநிலத்திலிருந்து வரும் பெரிய வெங்காயம், கிலோ ஒன்று 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சற்று உயர்ந்த தரத்துடன் கர்நாடக மாநிலத்திலிருந்து வரும் வெங்காயம் 50 முதல் 60 ரூபாய் வரையும், மஹாராஷ்டிரத்திலிருந்து வரும் வெங்காயம் 60 முதல் 70 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் சின்ன வெங்காயம் கிலோ 30 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 75 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்பேடு மார்க்கெட்

வெங்காயம் விலை தொடர்பாக கோயம்பேட்டில் காய்கறி வியாபாரம் செய்யும் பரமசிவம் என்பவர் கூறுகையில், தமிழகத்திற்கு மாஹாராஷ்டிர மாநிலம் நாசிக், பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வெங்காயம் வருகிறது என்றும் சமீபத்தில் அந்தப் பகுதிகளில் மழை பெய்ததால் அங்குள்ள வெங்காயப் பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதன் காரணமாகவே வெங்காயத்தின் விலை கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், தற்போதைய சூழலில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பில்லை என்றும் தைமாதம் வந்தால் வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அலுவலர்களுடன் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினர். இதில், வெங்காயத்தின் வரத்து குறைவாக இருப்பதனால் அவற்றின் விலை அதிகரித்திருப்பதாகவும், வெங்காயத்தை பதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர். மேலும், பண்ணை பசுமை நுகர்வோர் கூட்டுறவு கடைகளில் வெங்காயம் 33 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

வியை உயர்வு குறித்து அமைச்சர்கள் விளக்கம்

ஆனால், பல இடங்களில் பண்னை பசுமை நுகர்வோர் கடைகள் செயல்படாமலே உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க: 'வெங்காயம் விலை ரூ.25 அதுபோன வாரம்; இந்த வாரம் என்ன தெரியுமா?' - குமுறும் பொதுமக்கள்!

Intro:Body:வெங்காயம், மக்கள் அதிக அளவில் தங்கள் உணவில் பயன்படுத்தும் ஒரு அத்தியாவசிய காய். அடிக்கடி விலை ஏற்ற இறக்கத்தை சந்திப்பதால் வெங்காயத்தை சாதாரண மக்கள் விலை கொடுத்து வாங்க முடியாது சூழல் நிலவுகிறது. கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை மள மளவென உயர்ந்து வருகிறது. தலைநகர் சென்னையைப் பொருத்தவரையில், வெங்காயம் 30 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் பெரிய வெங்காயம், கிலோ ஒன்று 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சற்று உயர்ந்த தரத்துடன் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் வெங்காயம் 50 முதல் 60 ரூபாய் வரையும், மஹாராஷ்டிரத்தில் இருந்து வரும் வெங்காயம் 60 முதல் 70 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் சின்ன வெங்காயம் (சாம்பார் வெங்காயம்) கிலோ 30 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 75 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடர்பாக கேயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காய மொத்த வியாபாரம் செய்யும் பரமசிவம் பேசுகையில், "தமிழகத்திற்கு மாஹாராஷ்டிர மாநிலம் நாசிக், பெங்களூரு, டெல்லி, கல்கத்தா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வெங்காயம் வருகிறது. சமீபத்தில் அந்தப் பகுதிகளில் மழை பெய்ததால் அங்குள்ள வெங்காய பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் வெங்காய விலை கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் வெங்காயத்தின் விலை குறைந்து இருந்த நிலையில் தற்போது மழை காரணமாக மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் பெரிய வெங்காயம் கிலோ 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போதைய சூழலில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பில்லை. தை மாதம் புதிய வெங்காயம் சந்தைக்கு வந்தால் விலை குறைய வாய்ப்புள்ளது. தற்போது கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 60 முதல் 70 லாரிகளில் வெங்காயம் கொண்டுவரப்படுகிறது. சந்தைக்கு வரும் வெங்காயத்தின் தரமும் குறைவாகவே உள்ளது" என்றார்.

வெங்காய விலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உயரதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினர். இதில், மழைக்காலங்கலான நவம்பர்- டிசம்பர் மாதங்களில் வெங்காயத்தின் வரத்து குறைவாக இருப்பதனால் அவற்றின் விலை அதிகரித்திருப்பதாகவும், வெங்காயத்தை பதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்ணை பசுமை நுகர்வோர் கூட்டுறவு கடைகளில் வெங்காயம் 33 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஆனால் பல இடங்களில் பண்னை பசுமை நுகர்வோர் கடைகள் செயல்படாமலே உள்ளது. மொத்த சந்தைகளிலேயே வெங்காயத்தின் விலை உயர்வாக இருப்பாதல் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் மிக அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பேட்டி: ((பரமசிவம், வெங்காய விபாபாரி ))Conclusion:visual in mojo
Last Updated : Nov 6, 2019, 11:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.