ETV Bharat / state

வெங்காய விலை குறையும் - வியாபாரிகள் நம்பிக்கை! - onion-market-price-in-chennai

சென்னை: கடந்த சில தினங்களாக உச்சத்தில் இருக்கும் வெங்காயத்தின் விலை இனிவரும் நாட்களில் படிப்படியாக குறையும் என காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

onion-market-price-in-chennai
author img

By

Published : Oct 2, 2019, 12:00 AM IST

கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவது மக்களின் அன்றாட வரவு செலவுக் கணக்கில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை படிப்படியாக குறையும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.

இன்றைய நிலவரப்படி, கோயம்பேடு காய்கறி சந்தையில் சின்ன வெங்காயம் 30ரூபாய் முதல் 45ரூ வரை விற்பனை செய்யப்படுகிறது. சாம்பார் வெங்காயம் 30ரூ முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்கு வெங்காயத்தின் விலை 30 ரூபாயாக இருந்தது. ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் சின்ன வெங்காயம் (பழைய விற்பனை விலை)கிலோ ஒன்று 35ரூ முதல் 50 ரூபாய் வரையும், புதியது 20 ரூபாய் முதல் 42 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை மாநகரின் சில்லறை விற்பனை நிலையங்களில் வெங்காயத்தின் விலை 60 ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரை உள்ளது. தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் 33 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை கோயம்பேடு சந்தையைப் பொறுத்தவரையில் வெங்காயம் ஆந்திரா, கர்நாடாகா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வருகின்றன. அண்மையில் அந்தப் பகுதிகளில் கன மழை பெய்ததால் உற்பத்தி குறைந்து வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. அடுத்த சில நாட்களில் வெங்காயத்தின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், ஒட்டன்சத்திரம் சந்தைக்கு தேனி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தே வெங்காயம் வருவதால் அங்கு விலை ஏற்றம் பெரிய அளவில் இல்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வெங்காயப் பதுக்கலை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் வெங்காயத்தை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்து குறைந்து விலைக்கு விற்பனை செய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே பொதுவாக புரட்டாசி மாதத்தில் காய்கறிகள் விலை உயர்ந்து காணப்படும் நிலையில் தற்போது அனைத்து காய்கறிகளின் விலையும் சீராக உள்ளதாக கோயம்பேடு மொத்த விற்பனை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: தக்காளி வரத்து குறைவு....உள்ளூர் தக்காளிகளுக்கு விலை உயர்வு !

Intro:சென்னை:

கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவது மக்களின் அன்றாட வரவு செலவுக் கணக்கில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை படிப்படியாக குறையும் என வியாபாரிகள் கூறுகின்றனர். Body:இன்றைய நிலவரப்படி, கோயம்பேடு காய்கறி சந்தையில் சின்ன வெங்காயம் 30 முதல் 45 வரை விற்பனை செய்யப்படுகிறது. சாம்பார் வெங்காயம் 30 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்கு வெங்காயத்தின் விலை 30 ரூபாயாக இருந்தது. ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் சின்ன வெங்காயம் (பழையது) கிலோ ஒன்று 35 முதல் 50 ரூபாய் வரையும், புதியது 20 ரூபாய் முதல் 42 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை மாநகரின் சில்லறை விற்பனை நிலையங்களில் வெங்காயத்தின் விலை 60 ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரை உள்ளது. தமிழக அரசின் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் 33 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு சந்தையைப் பொறுத்தவரையில் வெங்காயம் ஆந்திரா, கர்நாடாகா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வருகின்றன. அண்மையில் அந்தப் பகுதிகளில் கன மழை பெய்ததால் உற்பத்தி குறைந்து வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. அடுத்த சில நாட்களில் வெங்காயத்தின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், ஒட்டன்சத்திரம் சந்தைக்கு தேனி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தே வெங்காயம் வருவதால் அங்கு விலை ஏற்றம் பெரிய அளவில் இல்லை என வியாபாரிகள் கூறுகின்றனர். பதுக்கலை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் வெங்காயத்தை தமிழக அரசே கொள்முதல் செய்து குறைந்து விலைக்கு விற்பனை செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பொதுவாக புரட்டாசி மாதத்தில் காய்கறிகள் விலை உயர்ந்து காணப்படும் நிலையில் தற்போது அனைத்து காய்கறிகளின் விலையும் சீராக உள்ளதாக கோயம்பேடு மொத்த விற்பனை வியாபாரிகள் கூறுகின்றனர். Conclusion:visuals via mojo
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.