கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால், தமிழ்நாடு பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்தது. இதை சீரமைக்க கடந்த மே மாதம் 24 பேர் கொண்ட பொருளாதார வல்லுநர்கள், பல்துறை நிபுணர்கள், உயர் அலுவலர்கள் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.
மேலும், 24 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவுக்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவருமான சி.ரங்கராஜனை, தலைவராக நியமித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவி்ட்டுள்ளது. இந்தக் குழுவினர் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆய்வு செய்து, அடுத்த மூன்று மாதங்களில் அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்வார்கள் என்றும் அறிவித்திருந்தது.
இந்நிலையில், கரோனாவால் பாதிகப்பட்டுள்ள தமிழ்நாடு பொருளாதாரத்தை மேம்படுத்த, அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பொருளாதார மேம்பாட்டுக்குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.