மாநிலங்களவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணி வேட்பாளராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவிக்கப்பட்டிருந்தார். இவர் தவிர, திமுக சார்பாக மூத்த வழக்கறிஞர் வில்சன், சண்முகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் மூவரும் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் பேரவைச் செயலாளரிடம் மனுதாக்கல் செய்துள்ளனர்
இதற்கிடையே, வைகோ மீதான தேச துரோக வழக்கில் அவர் குற்றவாளி என்றும், ஒரு வருட சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வைகோவுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தண்டனையால் அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படுவதில் எந்த சிக்கலும் இல்லை என்ற போதிலும், ஒருவேளை இந்த வழக்கை காரணம் காட்டி வைகோவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், அவருக்கு மாற்றாக திமுக சார்பில் அக்கட்சியின் சட்டப்பிரிவு ஆலோசகரும், வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.