சென்னை: கருணாநிதி நூற்றாண்டு சிறப்பு மருத்துவ முகாம்களின் மூலம் 1 லட்சத்து 88 ஆயிரத்து 885 பேர் உடல் பரிசோதனை செய்துகொண்டு உள்ளதாக, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, ''முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டினை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 103 இடங்களில் கலைஞர் நூற்றாண்டு மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள், கடந்த 24ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றன.
இதில் பதிவு செய்து பரிசோதித்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை 1,88,885 பேர் ஆகும். இம்மருத்துவ முகாமில் சித்தா மற்றும் இந்திய மருத்துவத்திற்காகப் பதிவு செய்து பரிசோதனை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை 35,138 பேர் ஆகும். நேற்று நடைபெற்ற மருத்துவ முகாமில் பல்வேறு மருத்துவத்துறைகள் அமைக்கப்பட்டு இருந்தது.
இதில் பரிசோதித்து நோய் கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு,
மருத்துவ முகாமில் விநியோகிக்கப்பட்ட மருந்துகளின் செலவுத்தொகை - ரூ.42,31,404
நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோய் எனும் இரண்டு நோய்களுக்காக பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை – 1,15,048
நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்று பதிவு செய்து பரிசோதித்துக் கொண்டவர்கள் – 14,471
நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்று பரிசோதித்ததில் கண்டறியப்பட்டவர்கள் – 4,056
இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் என்று பதிவு செய்து பரிசோதித்துக்கொண்டவர்கள் – 19,217
இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் என்று பரிசோதித்ததில் கண்டறியப்பட்டவர்கள் – 5,576
நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தநோய் உள்ளவர்கள் என்று பதிவு செய்து பரிசோதித்துக் கொண்டவர்கள் – 8,333
நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோய் என்று இரண்டும் உள்ளவர்கள் என்று பரிசோதித்ததில் கண்டறியப்பட்டவர்கள் – 2,005
கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை – 7,849
கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதித்ததில் அறிகுறி உள்ளவர்கள் – 762
மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டவர்கள் – 8,712
மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனையில் அறிகுறி உள்ளவர்கள் – 1,176
இரத்தச் சோகை கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டவர்கள் – 44,165
பரிசோதனையில் இரத்தச்சோகை கண்டறியப்பட்டவர்கள் – 5,492
சிறுநீரகச் செயல்பாட்டினை கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டவர்கள் – 28,553
பரிசோதனையில் சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் என்று கண்டறியப்பட்டவர்கள் – 785
இரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்து கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டவர்கள் – 28,658
இரத்தப் பரிசோதனையில் ரத்தக் கொழுப்பு அதிகம் கண்டறியப்பட்டவர்கள் – 1,299
காசநோய் பரிசோதனை மேற்கொண்டவர்கள் – 12,817
சளி பரிசோதனைக்கான மாதிரிகள் எண்ணிக்கை – 4,366
பரிசோதனையில் மேல்சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள் – 289
தொழுநோய் பரிசோதனை மேற்கொண்டவர்கள் – 12,591
தொழுநோய் பரிசோதனை மேற்கொண்டதில் மேல்சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள் – 133
தொழுநோய் பரிசோதனையில் நோய் உறுதி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள் – 14
கோவிட்-19 பரிசோதனை மேற்கொண்டவர்கள் – 936
பல் பரிசோதனை மேற்கொண்டவர்கள் – 13,685
பல் பரிசோதனை முடிந்து மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள் – 1,565
இ.சி.ஜி. பரிசோதனை மேற்கொண்டவர்கள் – 14,894
இ.சி.ஜி. பரிசோதனையில் பாதிப்பு கண்டறியப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டவர்கள் – 1,238
எக்கோ பரிசோதனை மேற்கொண்டவர்கள் – 7,020
எக்கோ பரிசோதனையில் பாதிப்பு கண்டறிய்ப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டவர்கள் – 715
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்தவர்கள் – 13,125
தமிழ்நாடு பார்வை இழப்புத் தடுப்புத் திட்டத்தின் மூலம் பரிசோதிக்கப்பட்டு கண் கண்ணாடி பெறப்பட்டவர்களின் எண்ணிக்கை – 3,852’
என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருணாநிதி நூற்றாண்டு மருத்துவ முகாமின் பயனாளிகளின் விவரத்தைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்திலேயே முதன்முறையாக பெரம்பலூரில் ‘கல்வியும் காவலும்’ திட்டம் அறிமுகம்!