சென்னை: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில் மிகப்பெரிய சாலை வழிகாட்டி பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சற்று முன் அந்த பெயர் பலகையானது திடீரென தரையை மட்டத்திலிருந்து அடியோடு பெயர்ந்து சாலையில் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து, வேன், ஆட்டோ, இருசக்கர வாகனத்தின் மீது பலமாக விழுந்தது.
இந்த நிலையில் மிகப்பெரிய பெயர் பலகை மேலே விழுந்ததில் மினி வேன் சாலையில் கவிழ்ந்தது. மேலும் இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச்சென்று காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியிலும் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டனர். சாலை நடுவில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பெயர் பலகை திடீரென சரிந்து சாலையில் சென்றவர்கள் மீது விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ் திரையுலக தேரின் அச்சாணியாக அன்பு செழியன் உருமாறியது எப்படி..?