ETV Bharat / state

ஒரே நாளில் 118 விமானங்களின் சேவை ரத்து

சென்னை: கோவிட் 19 பெருந்தொற்று பரவுவதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 118 விமானங்களின் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளன.

ஒரே நாளில் 118 விமானங்களின் சேவை ரத்து
ஒரே நாளில் 118 விமானங்களின் சேவை ரத்து
author img

By

Published : Mar 20, 2020, 10:31 AM IST

கோவிட்-19 வைரஸ் தொற்று கடந்தாண்டு இறுதியில் சீனாவில் பரவத்தொடங்கியது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் இந்த வைரஸ் தொற்று குறைகின்றபோதும், மற்ற நாடுகளில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், கரோனா அச்சம் காரணமாக, போதிய பயணிகள் இல்லாமல் சென்னை விமான நிலையம் வெறுமையாகக் காணப்படுகிறது. இதனால், இன்று மட்டும் 118 விமானங்களின் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளன.

ரத்துசெய்யப்பட்ட விமானங்கள்

இலங்கைக்குச் செல்லும் ஆறு விமானங்கள், குவைத்துக்குச் செல்லும் மூன்று விமானங்கள், மலேசியாவுக்கு செல்லும் ஆறு விமானங்கள், மஸ்கட் செல்லும் மூன்று விமானங்கள், துபாய் செல்லும் இரண்டு விமானங்கள், தாய்லாந்து செல்லும் இரண்டு விமானங்கள், தோகா, சிங்கப்பூர், பக்ரைன், ஜெர்மன், ஹாங்காங், மொரீசியஸ் ஆகிய இடங்களிலிருந்து சென்னை வரும் தலா ஒரு விமானம் வீதம் 29 விமானங்களும், இங்கிருந்து அந்நாடுகளுக்குச் செல்லும் 29 விமானங்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

இதைப் போலவே, போதிய பயணிகள் இல்லாமல் சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் ஆறு விமானங்கள், டெல்லி செல்லும் ஐந்து விமானங்கள், மும்பை செல்லும் நான்கு விமானங்கள், ஹைதராபாத், கோவை செல்லும் இரண்டு விமானங்கள், கொச்சி, புனே, தூத்துக்குடி, திருச்சி, சீரடி, மங்களூரு, கோவா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் தலா ஒன்று வீதம் மொத்தமாக 30 விமானங்களின் சேவையும், இந்த நகரங்களிலிருந்து சென்னைக்கு வரும் 30 விமானங்களின் சேவையும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

கரோனா பெருந்தொற்றின் அச்சம் காரணமாக அறுபது உள்நாட்டு விமானங்களின் சேவையும், 58 சர்வதேச விமானங்களின் சேவையும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: 'மார்ச் 22ஆம் தேதி கோயம்பேடு சந்தை மூடப்படும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.