சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் வசித்துவந்தவர் சையத் யூசுப் (67). இவர் நேற்று இரவு தனது நண்பர் கோபியை சந்திக்க எல்லீஸ் சாலையில் தாவுலத்தான் தெருவில் உள்ள தேநீர்க் கடையில் சிகரெட் பற்றவைத்துள்ளார்.
அப்போது, இந்தத் தீயானது தவறுதலாக அவரது லுங்கியில் பற்றிக் கொண்டது. இதை யூசப் கவனிக்காமல் விட்டதால் தீ மளமளவென அவர் உடல் முழுவதும் பரவியுள்ளது. பின்னர், அருகில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
இதில் பலத்த காயமடைந்த யூசுப் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இது குறித்து அண்ணா சாலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.