மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் விவேக்குக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் சமூக வலைதளங்களிலும், நேரில் சென்றும் இரங்கல் தெரிவித்தும் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.
அந்த வகையில், திமுக சார்பில் முன்னதாக அக்கட்சியின் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கருணாநிதியால் ‘சின்னக் கலைவாணர்’ என பட்டம் சூட்டப்பட்டு, திரையுலகில் புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் விவேக் மறைவெய்தியதையொட்டி, இன்று (17.4.2021), சென்னை, சாலிகிராமம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில், நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான ஆ.இராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் ஆகியோர் நேரில் சென்று, மலர் அஞ்சலி செலுத்தினர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’கல்லூரியில் ஆங்கிலப் பாடகனாக அசத்திய விவேக்' - நினைவுகளைப் பகிர்ந்த ஓவியர்