ETV Bharat / state

அழுகிய நிலையில் முதியவர் சடலம் கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை!

சென்னை: அழுகிய நிலையில் தலையில் ரத்த காயங்களுடன் முதியவர் உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Old Man Death In Chennai  சென்னையில் முதியவர் மரணம்  முதியவர் மரணம்  மர்மமான முறையில் முதியவர் மரணம்  Old Man Death  The mysterious old man dies
Mysterious Death
author img

By

Published : May 29, 2020, 11:31 PM IST

சென்னை மந்தைவெளி அம்மணி அம்மாள் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் மாதவன் (66). முதுகலை பட்டதாரியான இவர் திருமணம் செய்து கொள்ளாமல் கடந்த 25 ஆண்டுகளாக மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வந்துள்ளார்.

இவரது தங்கை ராஜலட்சுமி செங்கல்பட்டில் வசித்து வருகிறார். இதனால், மாதவன் அடிக்கடி சகோதரியிடம் செல்போனில் பேசி வருவது வழக்கம். குறிப்பாக கடந்த 25ஆம் தேதி முதல் ராஜலட்சுமிக்கு மாதவனிடம் இருந்து செல்போன் அழைப்புகள் வராததால் சந்தேகமடைந்த ராஜலட்சுமி அவரது மகன் வெங்கட்டை மாதவனின் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை வெங்கட், மாதவனின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அச்சமடைந்த அவர் உடனடியாக அபிராமபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டினுள் சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் மாதவன் நாற்காலியில் இருந்து பின்பக்கமாக விழுந்து தலையில் ரத்த காயங்களுடன் அடிப்பட்டு இறந்து கிடந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் மாதவனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த 26ஆம் தேதி கரோனா சென்செக்ஸ் எடுக்க வரும் போது மாநகராட்சி அலுவலர்கள் மாதவனை பார்த்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இச்சமபவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:திரையரங்கில் படம் காட்டச் சொல்லி தகராறில் ஈடுபட்ட மூவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.