தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வார காலம் கடந்தபோதிலும், அதிமுகவின் சட்டப்பேரவை கட்சி தலைவர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்து வந்தது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில் இன்று (மே.10) இரண்டாவது முறையாக நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி வாழ்த்து பெற்றார்.

இதையும் படிங்க: எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு!