ETV Bharat / state

ஓ.பன்னீர் செல்வம் ஒரு ஒப்பற்றத் தலைவர்- புகழேந்தி புகழாரம்

ஓ.பன்னீர் செல்வம் ஒரு ஒப்பற்றத் தலைவர் என்றும் அவரைப்போல் ஒரு மனிதரை தான் இனி பார்க்கமுடியாது என்றும் அதிமுகவின் செய்தித்தொடர்பாளர் புகழேந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

O. Panneer Selvam is an unparalleled leader says admk pugalenthi
ஓ.பன்னீர் செல்வம் ஒரு ஒப்பற்றத் தலைவர்- புகழேந்தி புகழாரம்
author img

By

Published : Feb 9, 2021, 11:00 PM IST

சென்னை: சென்னை விமான நிலையத்தில் அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "பெங்களூரு சிறைக்குச் செல்லும்போது சசிகலா, இளவரசி, சுதாகரன் என மூன்று பேர் சென்றார்கள். தற்போது, சுதாகரனை அங்கேயே விட்டுவிட்டு வந்திருக்கின்றனர். தினகரனிடம் கோடிக் கணக்கில் பணம் உள்ளது. ஆனால், அவர் தனது சொந்த தம்பியான சுதாகரனை காப்பாற்றி வெளியே கொண்டுவருவதற்கு எந்த செயலையும் செய்யவில்லை.

வீட்டையே காப்பாற்றமுடியாதவர், நாட்டை எப்படி காப்பாற்றுவார். அமமுக கம்பெனியில் உள்ளவர்கள் டிடிவி தினகரனை நம்பி ஏமாந்துவிடவேண்டாம், அவர் விரைவில் அமமுகவை இழுத்து மூடப்போகிறார். நானும் டிடிவி தினகரனுடன் இருந்தவன்தான் ஆனால், போகப்போகத்தான் புரிந்துகொண்டேன் அவர் நல்ல மனிதர் இல்லை என்பதை.

ஓ.பன்னீர் செல்வம் ஒரு ஒப்பற்றத் தலைவர்- புகழேந்தி புகழாரம்

இமாலய வெற்றியை இவருக்கு கொடுத்த ஆர்.கே. நகர் மக்களுக்கு இவர் ஒன்றுமே செய்யவில்லை, வெற்றி பெற்றபின்பு தொகுதியை திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ஆறு வருட காலத்திற்கு சசிகலா தேர்தலில் நிற்கமுடியாது என்பதை மட்டும் இப்போது தெரிவித்துக்கொள்கிறேன்.

ஓ. பன்னீர் செல்வம் ஒப்பற்றத் தலைவர், அவருக்கு நிகரானவரை இனி பார்க்கமுடியாது. மூன்று முறை முதலமைச்சர் பதவியை கொடுத்து திருப்பி கேட்டதும் எவ்வித பிரச்னையும் இல்லாமல் திருப்பிக் கொடுத்தார். துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் கொடுத்துள்ள விளம்பரங்களில் கூறப்பட்டுள்ளவை அவருடைய சாதனைகள்தான், அதில் எவ்வித குழப்பமும் இல்லை. ஓபிஎஸ் அவர்கள் நல்லமுறையில் முதலமைச்சருடன் இணைந்து கட்சியை வழிநடத்தி வருகிறார்" என்றார்.

இதையும் படிங்க: சசிகலா உடல்நிலை குறித்து நலம் விசாரித்த ரஜினிகாந்த் - டிடிவி தினகரன் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.