ETV Bharat / state

விவாகரத்தான நபர்கள் குறி... போலி மேட்ரிமோனி தளம் மூலம் கைவரிசையைக் காட்டிய நைஜீரிய கும்பல்! - போலி மேட்ரிமோனி தளம் நைஜீரிய கும்பல்

மேட்ரிமோனி தளம் மூலம் விவகாரத்தான பெண்களைக் குறிவைத்து, தான் ஒரு வெளிநாட்டு மருத்துவர் எனவும் திருமணம் செய்து கொள்வதாகவும்கூறி நூதன முறையில் மோசடி செய்த நைஜீரிய கும்பலைச் சேர்ந்த இருவரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

போலி மேட்ரிமோனி தளம் மூலம் கைவரிசையைக் காட்டிய நைஜீரிய கும்பல்

author img

By

Published : Sep 3, 2021, 1:00 PM IST

சென்னை: பெரம்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் நடந்து விவகாரத்தான நிலையில் மறுமணம் செய்து கொள்வதற்காக மேட்ரிமோனி தளம் ஒன்றில் பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து, மேட்ரிமோனி தளம் மூலம் அப்பெண்ணை தொடர்புகொண்ட நபர் ஒருவர் தான் நெதர்லாந்தில் மருத்துவராக பணிபுரிவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அப்பெண்ணை நம்ப வைக்க தான் அறுவை சிகிச்சை செய்வது போன்ற புகைப்படங்களையும் அனுப்பி, தனக்கும் விவகாரத்தானதால் பெண் தேடி வருவதாகவும் கூறி பெரம்பூரைச் சேர்ந்த அப்பெண்ணிடம் பழகி வந்துள்ளார்.

வைர மோதிரம், ஆப்பிள் லேப்டாப் கிப்ட்

நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாற, இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். இதனையடுத்து லேப்டாப் பரிசு ஒன்றை சென்னைக்கு அனுப்பி இருப்பதாக அந்த நபர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சில நாள்கள் கழித்து கொரியர் கம்பெனியில் இருந்து பேசுவதாகக் கூறி அப்பெண்ணுக்கு பார்சல் வந்துள்ளது எனவும், பொருளுக்கு உண்டான ஜி.எஸ்.டி தொகை 30 ஆயிரம் ரூபாயை செலுத்திவிட்டு பொருளைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பி வங்கிக் கணக்கு மூலமாக அப்பெண் பணம் அனுப்பியுள்ளார். ஆனால் அவருக்கு லேப்டாப் வந்து சேரவில்லை. இதேபோல் தொடர்ந்து வைர மோதிரம், நெதர்லாந்து பணமாக ஒரு கோடி பரிசு ஆகியவை வந்திருப்பதாகக் கூறி அப்பெண்ணிடம் பல லட்சம் ரூபாய் பணம் பறிக்கப்பட்டுள்ளது.

15க்கும் மேற்பட்ட நபர்களிடம் மோசடி!

இதனையடுத்து சந்தேகமடைந்த அந்தப் பெண், மேட்ரிமோனி நிறுவனத்தை அணுகி கேட்டபோது, இவை அனைத்தும் மோசடி கும்பலின் செயல் எனத் தெரியவந்தது. இதனையடுத்து தன்னை ஏமாற்றி 4.15 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட பெண் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவலர்களிடம் புகார் அளித்தார்.

இது தொடர்பாக சைபர் கிரைம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், இதே போல் விவகாரத்தான 15க்கும் மேற்பட்ட நபர்களிடம் இந்த மோசடி கும்பல் கைவரிசையைக் காட்டி இருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.

போலி மேட்ரிமோனி தளம் மூலம் கைவரிசையைக் காட்டிய நைஜீரிய கும்பல்
போலி மேட்ரிமோனி தளம்

இதையும் படிங்க: ஆதார் விவரங்களைக் கொண்டு பி.எப் பணம் திருட்டு: இ-சேவை மைய உரிமையாளர் கைது!

போலி மேட்ரிமோனி தளம்

இதனையடுத்து அந்த மோசடி கும்பலுக்கு பணம் அனுப்பிய வங்கிக் கணக்கை காவலர்கள் ஆய்வு செய்தபோது ஒரு பிரபல வங்கியில் கணக்கு தொடங்கி அதன் மூலமாக பணப்பரிவர்த்தனைகள் நடந்திருப்பது தெரியவந்தது.

மேலும் அத்தளம் போலியாக உருவாக்கப்பட்ட மேட்ரிமோனி வெப்சைட் என்பதும், இந்தக் கும்பல் விவகாரத்தாகி இரண்டாவது திருமணத்திற்கு வரன் தேடும் ஆண்கள், பெண்களை குறிவைத்து மோசடியில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளதும் தெரியவந்தது.

ஆப்பரேஷன் ’டி’

இதனைத் தொடர்ந்து அக்கும்பல் பேசிய செல்போன் எண்ணைக் கொண்டு கண்காணித்ததில் டெல்லி பகுதியிலிருந்து அழைப்புகள் வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவலர்கள் ஆப்ரேஷன்-டி எனப் பெயர் கொண்ட தனிப்படை ஒன்றை அமைத்து டெல்லி, உத்தம் மாவட்டத்திலுள்ள துவாரகா பகுதிக்கு விரைந்தனர்.

தொடர்ந்து செல்போன் டவர் காண்பித்த குடியிருப்பில் சென்று விசாரித்த போது அந்தக் குடியிருப்பு முழுவதுமே நைஜீரியர்கள் தங்கி இருந்தது தெரிய வந்தது. இது காவல் துறையினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தவே, செல்போன் எண்ணை வைத்து குடியிருப்பில் பதுங்கி இருந்த இரண்டு நைஜீரியர்களை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் கைது செய்தனர்.

நைஜீரியர்கள் குடியிருப்பு

விவாகாரத்தான நபர்கள் குறி...

தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பாலினஸ் மற்றும் கிளிடோ என்பதும், இவர்கள் மேட்ரிமோனி வெப்சைட் ஒன்றை உருவாக்கி அதில் விவாகாரத்தாகி மறுமணம் செய்துகொள்ள விரும்பும் ஆண், பெண்களின் செல்போன் எண்ணை எடுத்து மருத்துவர் போல் நடித்து பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளதும் தெரிய வந்தது.

போலி மேட்ரிமோனி தளம் மூலம் மோசடி செய்த நைஜீரிய நபர்

கிப்ட் ஸ்கேம்

’கிப்ட் ஸ்கேம்’ எனும் பெயரை வைத்து இந்த மோசடியில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் இவர்களது கூட்டாளியான ஒரு பெண் உள்பட இருவர் தப்பியோடிய நிலையில், இவர்களிடமிருந்து 15 செல்போன்கள், 4.3 லட்சம் ரூபாய் பணம், 15 ஏ.டி.எம் கார்டுகள், லேப்டாப் ஆகியவற்றை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

நைஜீரிய நபர்

இதனையடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு நைஜீரியர்களை துவாரகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்டு பெற்று தனிப்படை காவலர்கள் சென்னை அழைத்து வந்தனர். தொடர்ந்து மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: சீனாவில் எதிரொலிக்கும் கீழடியின் பெருமை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.