ETV Bharat / state

'ஜெயலலிதாவிற்கு என்னுடைய புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன்' - சீமான்!

author img

By

Published : Dec 5, 2019, 1:56 PM IST

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு என்னுடைய புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை  ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ntk-seeman-comments-about-jeyalalitha
ntk-seeman-comments-about-jeyalalitha

சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், ' ஜெயலலிதாவைச் சந்தித்தபோது என்னிடம் அன்பாகவும் பரிவாகவும் பேசினார். அந்த நினைவுகள் நீங்காமல் உள்ளன. இலங்கையில் நடந்தது இனப்படுகொலை. ராஜபக்ச ஒரு போர் குற்றவாளி. சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி சொல்ல போய் இருந்தேன்.

என்னிடம் ஈழம், ஈழத் தமிழர்கள் குறித்து நிறைய பேசினார்கள். ஹிலாரி கிளின்டன் தன்னை சந்தித்தபோது 45 நிமிடம் ஈழத் தமிழர்கள் பிரச்னைக் குறித்து பேசியதாக ஜெயலலிதா தெரிவித்தார். நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் வராமல், மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது. எல்லோரும் சேர்ந்து போராடி, வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டு வருவோம் என்றார். இவை எல்லாம் என்னுடைய நினைவில் இருக்கிறது. ஜெயலலிதாவிற்கு என்னுடைய புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன்.

மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை தந்தால் பாதுகாப்பாக இருக்கும். பணம் தருவது தற்காலிக இழப்பீடாகத் தான் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வாய்ப்புத் தர வேண்டும்.

சீமான் பேட்டி

தேர்தல் வரும்போது தான் ரஜினி கட்சி ஆரம்பித்து வருவார். அதுவரை அவர் நடித்துக் கொண்டு இருப்பார்.

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தினால் வியப்பாக எதுவும் இருக்காது. போட்டி, பொறாமை நிறைந்த அரசியல் சூழல் இருக்கும் போது, உள்ளாட்சித் தேர்தல் வேண்டாத வேலையாக தான் நினைக்கிறேன். 2021 பொதுத் தேர்தலின் போது, உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் தான் நிர்வாகம் சரியாக இருக்கும். உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் போட்டியிடுவோம் ' எனக் கூறினார்.

இதையும் படிங்க:

' உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்பதில் அரசு கவனம் செலுத்துகிறது ' - கே.எஸ். அழகிரி

Intro:சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி
Body:சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி

ஜெயலலிதாவை சந்தித்தபோது என்னிடம் அன்பாகவும் பரிவாகவும் பேசினார். அந்த நினைவுகள் நீங்காமல் உள்ளது. இதனால் மதிப்புக்குரியவராக இருந்தார். இலங்கையில் நடந்தது இனப்படுகொலை. ராஜபக்ச ஒரு போர் குற்றவாளி சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி சொல்ல போய் இருந்தேன். என்னிடம் ஈழம் மற்றும் ஈழ தமிழர்கள் குறித்து நிறைய பேசினார்கள். ஹிலாரி கிளின்டன் தன்னை சந்தித்தபோது 45 நிமிடம் ஈழ தமிழர்கள் பிரச்சனை குறித்து பேசியதாக ஜெயலலிதா தெரிவித்தார். நாட்டின் வெளியுறவு கொள்கையில் மாற்றம் வராமல் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது. எல்லாரும் சேர்ந்து போராடி வெளியுறவு கொள்கையில் மாற்றம் கொண்டு வருவோம் என்றார். இவை எல்லாம் என்னுடைய நினைவில் இருக்கிறது. ஜெயலலிதாவிற்கு என்னுடைய புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன்.

எல்லாரும் சேர்ந்து எங்களுக்கு நிதி அளிக்க கூடிய நிலை தான் இருக்கிறது. மேட்டுப்பாளையத்தில் பலியான குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல செல்கிறோம். பாதிக்கப்பட்டதும் முதலில் நாம் தமிழர் கட்சியினர் தான் சென்று உதவினார்கள்.

பலியானவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை தந்தால் பாதுகாப்பாக இருக்கும். பணம் தருவது தற்காலிக இழப்பீடாக தான் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வாய்ப்பு தர வேண்டும்.

படங்களில் ரஞ்சித்தின் துணிவாக முயற்சிகளை பாராட்டுகிறேன். அதுபோன்ற படங்களை மக்கள் பார்த்து ஆதரவு தர வேண்டும். அடுத்த சாட்டை என்ற சமுத்திரகனி படத்தை பார்த்தேன். திரைபடங்கள் கண்வழியாக போதையை தரும் சாராய கடையாக இல்லாமல் மாலை நேர கல்லூரியாக இருக்க வேண்டும். குடும்ப உறவு, பாசம், அன்பு கற்பிக்க கூடிய பல்கலைக்கழகமாக சினிமா இருந்தது. ஆனால் தற்போது இல்லை. அதில் அத்திபூத்து போல் சில சிறந்த படமாக வருகிறது.

தேர்தல் வரும்போது தான் ரஜினி கட்சி ஆரம்பித்து வருவார். அதுவரை அவர் நடித்துக் கொண்டு இருப்பார்.

உள்ளாட்சி தேர்தலை நிறுத்தினால் வியப்பாக எதுவும் இருக்காது. இன்னும் 1 ஆண்டுகள் தான் இருக்கிறது. 6 மாதம் முடிந்ததும் தேர்தல் காய்ச்சல் வந்துவிடும். தேர்தலில் கூட்டணி நோக்கி சென்றுவிடுவார்கள். ஒராண்டிற்கு செல்வு செய்து சொல்வதற்காக தேர்தலை நடத்துகிறார்கள். பொது தேர்தல் நடந்ததும் ஆட்சி மாற்றம் வந்தால் உள்ளாட்சியை கலைத்துவிட்டு மறுபடியும் தேர்தல் நடத்துவதா இதே நிலை நீடிக்குமா. அதிமுக ஆட்சிக்கு உள்ளாட்சியில் திமுக உறுப்பினர்களுக்கு நிதி தருமா. வேறு கட்சி வந்தால் மற்ற கட்சி உறுப்பினர்களுக்கு நிதி தருமா.. தேவையற்ற குழப்பம் நீடிக்கும்.

போட்டி, பொறாமை நிறைந்த அரசியல் சூழல் இருக்கும் போது உள்ளாட்சி தேர்தல் வேண்டாத வேலையாக தான் நினைக்கிறேன்.

2021 பொது தேர்தல் முடிந்தது உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் தான் நிர்வாகம் சரியாக இருக்கும். தேர்தலை நடத்த சொல்வதால் நடத்துகிற மாதிரி தான் பார்க்கிறேன்.

உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.