ETV Bharat / state

NSE சித்ரா ராமகிருஷ்ணனின் கூட்டாளி ஆனந்த் சுப்ரமணியம் கைது

தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணனின் கூட்டாளி ஆனந்த் சுப்ரமணியம் சிபிஐ அதிகாரிகள் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

NSE சித்ரா ராமகிருஷ்ணனின் கூட்டாளி ஆனந்த் சுப்ரமணியம் கைது
NSE சித்ரா ராமகிருஷ்ணனின் கூட்டாளி ஆனந்த் சுப்ரமணியம் கைது
author img

By

Published : Feb 25, 2022, 10:03 AM IST

சென்னை:என்எஸ்இ மேலாண் இயக்குநராகவும் , தலைமை நிர்வாக அலுவலராக சித்ரா ராமகிருஷ்ணா 2013ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். அந்த சமயத்தில் என்எஸ்இ நிர்வாக அலுவலராகவும், மேலாண் இயக்குனரின் உதவியாளராகவும் ஆனந்த் சுப்ரமணியன் என்பவர் நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தில் முறைகேடுகள் காணப்படுவதாகவும், அரசின் வழிமுறைகளை முறையாக பின்பற்றப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது.

சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்பிரமணியன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் அண்மையில் சோதனை நடத்தினர். இதில், தேசிய பங்குச் சந்தையில் பல்வேறு ஊழல் விவகாரங்களிலும்,புகாருக்கும் உட்பட்ட தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணன், இந்த வாரத்தில் சிபிஐ அலுவலர்களால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படப்போவதாகத் தகவல்கள் வெளியானது.

NSE சித்ரா ராமகிருஷ்ணனின் கூட்டாளி ஆனந்த் சுப்ரமணியம் கைது
NSE சித்ரா ராமகிருஷ்ணனின் கூட்டாளி ஆனந்த் சுப்ரமணியம் கைது

இந்நிலையில்,நேற்று(பிப்.24) நள்ளிரவு சென்னையில் ஆனந்த் சுப்ரமணியம் சிபிஐ அலுவலர்களால் கைது செய்யப்பட்டார். தேசிய பங்குச் சந்தையில் நடந்த ஊழல் விவகாரங்களில் இவருக்கு பங்கிருக்கும் என சிபிஐ சந்தேகிப்பதாகத் தெரிகிறது. அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:உக்ரைனில் சிக்கியுள்ள மருத்துவ மாணவி-மீட்டுத்தரக் கோரும் பெற்றோர்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.