ETV Bharat / state

நவம்பர் 14; தென் மண்டல முதலமைச்சர்கள் குழுக்கூட்டம் - சென்னை மாவட்ட செய்திகள்

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மண்டல முதலமைச்சர்கள் குழுக்கூட்டம் நவம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது.

தென் மண்டல முதலமைச்சர்கள் குழுக்கூட்டம்
தென் மண்டல முதலமைச்சர்கள் குழுக்கூட்டம்
author img

By

Published : Nov 6, 2021, 5:55 PM IST

ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மண்டல முதலமைச்சர்கள் குழுக்கூட்டம் நவம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களுடன், அந்தமான், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்களும் கலந்து கொள்ள உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநிலங்களுக்கு இடையே சுமுக உறவை மேம்படுத்தும் பணியை மேற்கொள்ள இந்தியாவில் மண்டல வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சார்பாக இந்த குழுவில் உறுப்பினராக உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அல்லது கூடுதல் உறுப்பினர்களாக உள்ள அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் முக்கிய பிரமுகர்கள் தங்கும் இடங்களில் உதவி மையங்கள், மருத்துவ மையங்கள், பாதுகாப்பு, போக்குவரத்து, உணவு போன்ற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவில் உள்ள மண்டலக்குழுக்களும் அதில் இடம்பெற்றுள்ள மாநிலங்களும்:

தெற்கு மண்டலக் குழு:

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் லட்சத் தீவுகள்.

வடக்கு மண்டலக் குழு:

சண்டிகர், அரியானா, இமாசலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான்.

வடமத்திய மண்டலக் குழு:

பீகார், டெல்லி, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட்.

வடகிழக்கு மண்டலக் குழு:

அசாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா.

கிழக்கு மண்டலக் குழு:

மேற்கு வங்காளம், ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், சிக்கிம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள்.

மேற்கு மண்டலக் குழு:

மகாராஷ்டிரா, குஜராத், கோவா, தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் டையூ டாமன்.

இதையும் படிங்க: முதலமைச்சருக்கு பரிசளித்த காவலர்கள்; ஒரு நாள் விடுமுறைக்கு நன்றி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.