ரெட், ஆரஞ்சு அலர்ட்
புதுச்சேரி, தமிழ்நாட்டில் இன்று விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களுக்கு ரெட் எச்சரிக்கையும், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கன மழை
தமிழ்நாட்டில் இன்று சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் அதி கன மழை பெய்யும் என்று சென்னை மண்டல ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மின் தடை
பராமரிப்பு பணி காரணமாக இன்று (நவ.11) பொன்னேரியில் ஒரு நாள் மின் தடை விதித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.