100 விழுக்காடு கட்டணம் செலுத்த வேண்டும் என கேட்கும் தனியார் பள்ளிகள் மீது பெற்றோர்கள் அளிக்கும் வாய்மொழி, எழுத்துப்பூர்வமான புகார்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் விசாரணை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 17ஆம் தேதி உத்தரவிட்டது.
மேலும், முழு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும் என நிர்பந்திக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சரியாக செயல்படவில்லை எனவும் நீதிமன்றம் குற்றஞ்சாட்டியது.
அதன் அடிப்படையில் தனியார் பள்ளிகள் குறித்த புகாரை பெறுவதற்கு பிரத்யேகமாக ஒரு மின்னஞ்சல் முகவரியை ஆரம்பித்து அதை பெற்றோர்கள், பொதுமக்கள் அறியும் வகையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்த வழக்கு செப்டம்பர் 7ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில் 14 சிபிஎஸ்இ பள்ளிகளும், 12 மெட்ரிக்குலேசன் பள்ளிகளும் விதிகளை மீறி 100 விழுக்காடு கட்டணம் பெற்றதாக புகார்கள் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வந்தன. அதைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் 18 பள்ளிகள் உயர் நீதிமன்றத்தின் விதிகளை மீறி கட்டணம் வசூல் செய்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். அதன் அடிப்படையில் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற்றுள்ளனர். அதில் எட்டு பள்ளிகளின் மீது பெற்றப்பட்ட புகாரில் உண்மை இல்லை என தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: தனியார் பள்ளிகள் முழு கட்டணம் செலுத்த நிர்பந்தித்தால் இந்த எண்ணில் புகார் அளிக்கலாம்...!