ETV Bharat / state

கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் போராட்டம்: தலைமைச் செயலக சங்கம் அறிவிப்பு - Tamil Nadu

தலைமைச் செயலக பணியாளர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும், அகவிலைப்படியினை வழங்க வலியுறுத்தியும், கோரிக்கை அட்டை அணிந்து பணி புரியும் போராட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் தெரிவித்துள்ளது.

கோரிக்கை அட்டை அணிந்து பணி புரியும் போராட்டம் அறிவிப்பு:தலைமைச் செயலக சங்கம்

author img

By

Published : Nov 20, 2022, 6:58 AM IST

சென்னை: நவம்பர் 23, 24, 25 ஆகிய மூன்று நாட்கள் தலைமைச் செயலக பணியாளர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும், அகவிலைப்படியினை வழங்க வலியுறுத்தியும், கோரிக்கை அட்டை அணிந்து பணி புரியும் போராட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் தெரிவித்துள்ளது.

அதாவது ஒன்றிய அரசு அதன் பணியாளர்களுக்கு 1.7.2022 முதல் உயர்த்தி வழங்கிய 4 சதவிகித அகவிலைப்படியினை வழங்காததற்கும், ஈட்டிய விடுப்புக் கணக்கிலுள்ள விடுப்பினை சரண் செய்து ஊதியமாகப் பெறும் நடைமுறையானது, காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது 1.4.2003 க்குப் பிறகு பணியில் சேர்ந்த பணியாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கும் தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்தினை ஈர்த்திடும் வகையில், எதிர்வரும் 23.11.2022 , 24.11.2022 , 25.11.2022 ஆகிய மூன்று நாட்களில் தலைமைச் செயலகப் பணியாளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.