ETV Bharat / state

மன அழுத்தத்தில் இறந்துபோன முதலை: மனம் உருகிய விஞ்ஞானி! - மன அழுதத்தில் இறந்துபோன முதலை

சென்னை: அதிக அளவு சத்தத்தால் மன அழுத்தம் ஏற்பட்டு இறந்துபோன முதலைக் குறித்து பிரபல உயிரியல் விஞ்ஞானி மனம் உருக முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கியூபா நாட்டு முதலை
author img

By

Published : Apr 4, 2019, 7:58 PM IST

சென்னையை அடுத்த செம்மஞ்சேரி அருகே தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான முதலைப் பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது. முதலைகள் குறித்து ஆராய்ச்சி மற்றும் பொழுதுபோக்கு இடமாக இது திகழும் நிலையில், இங்கு நூற்றுக்கணக்கான அரிய வகை வெளிநாட்டு முதலை வகைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இப்பண்ணையில் வளர்ந்துவந்த கியூபா நாட்டைச் சேர்ந்த அரியவகை முதலை ஒன்று அண்மையில் திடீரென இறந்து போனது.

இதுகுறித்து, அந்தப் பண்ணையின் நிறுவனர்களின் ஒருவரும் பிரபல உயிரியல் விஞ்ஞானியுமான ரோம் விட்டேக்கர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“கடந்த மார்ச் 30ஆம் தேதி இரவு, எங்களது பண்ணைக்கு அருகில் உள்ள ஷெரட்டான் கிராண்ட் சென்னை ரிசார்ட் அண்ட் ஸ்பா (Sheraton Grand Chennai Research & Spa) என்ற தனியார் விடுதியில் சவுண்ட் ஸ்பீக்கர்களை அதிக அளவில் வைத்திருந்தனர். இதனால், இரைச்சல் அதிகம் ஏற்பட்டதால் சத்தத்தைக் குறைவாக வைக்குமாறு நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

இறந்துபோன முதலை அந்த விடுதியிலிருந்து சுமார் 50 அடி தூரத்தில்தான் இருந்தது. இரைச்சல் அதிகளவிலிருந்ததன் காரணத்தினால் முதலைக்கு மன அழுத்தம் ஏற்பட்டு இறந்துவிட்டது என்பதில் சந்தேகம் இல்லை. இறந்துபோன முதலை நன்றாக உணவை உட்கொண்டு ஆரோக்கியமாகவும் இருந்தது. அதன் உடம்பில் காயங்களோ, நோய்வாய்ப்பட்டதற்கான எந்த அறிகுறியோ எதுவுமே இல்லை.

இந்த முதலை இனம் உலகிலேயே மிக அரிய வகை உயிரினம் ஆகும். ஒரு ஆண் முதலைக்கு மூன்று பெண் முதலைகள் என்ற விகிதத்தில் உள்ளன. நல்ல வேலை இது ஆண் முதலை இல்லை. அந்த பகுதியிலிருந்து முதலைகளை அப்புறப்படுத்துவதற்கு நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இந்த முதலைப் பண்ணையின் நிறுவனர்களுள் ஒருவரான எனக்கு இது ஒரு பேரிழப்பு” என தன் வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

ரோம் விட்டேக்கர் முகநூள் பதிவு
ரோம் விட்டேக்கர் முகநூல் பதிவு

Intro:

Body:அதிக அளவு சத்தத்தால் மன அழுத்தம் ஏற்பட்டு சென்னை முதலைப் பண்ணையில் அரிய வகை முதலை இறந்துள்ளதாக பிரபல உயிரியல் விஞ்ஞானி ரோம் விட்டேக்கர் தெரிவித்துள்ளார்

சென்னை அடுத்த செம்மஞ்சேரி அருகே முதலை பண்ணை தனியார் நிறுவனம் ஒன்றால் நடத்தப்பட்டு வருகிறது இந்த பண்ணை தான் முதலையை குறித்த ஆராய்ச்சி மற்றும் பொழுது போக்கு இடமாக திகழ்கிறது இங்கு நூற்றுக்கணக்கான முதலை இனங்கள் குறிப்பாக அரிய வகை மற்றும் வெளிநாட்டு முதலை வகைகள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. இன்று கியூபன் இன வகையைச் சேர்ந்த அரியவகை முதலை ஒன்று இறந்து கிடந்தது இது குறித்து அந்தப் பண்ணையின் நிறுவனர்களில் ஒருவரும் பிரபல உயிரியல் விஞ்ஞானியான ரோம் விட்டேக்கர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளதாவது: கடந்த மார்ச் 30ம் தேதி இரவில் எங்களது பண்ணைக்கு அருகில் உள்ள ஷெரட்டான் கிராண்ட் சென்னை ரிசார்ட் அண்ட் ஷ்பா என்ற தனியார் விடுதியில் சவுண்ட் ஸ்பீக்கர்களை அதிக அளவில் வைத்திருந்தனர் இதனால் இரைச்சல் அதிகளவில் ஏற்பட்டது சத்தத்தை குறைவாக வைக்குமாறு நாங்கள் கேட்டோம் அவ்வாறு அவர்கள் செய்யவில்லை இதனால் அதிகளவில் இரைச்சல் ஏற்பட்டுள்ளது. இறந்து போன முதலை அந்த விடுதியில் இருந்து 50 அடி தூரத்தில் தான் இருந்தது. இதனால் அதிகளவு இரைச்சல் ஏற்பட்டு அதற்கு மன அழுத்தம் ஏற்பட்டு உள்ளது சந்தேகமே இல்லை இது அந்த இரைச்சலால் ஏற்பட்ட அதிர்வு மற்றும் அழுத்தத்திலேயே இந்த முதலை இறந்துள்ளது இந்த முதலை நன்கு ஆரோக்கியமாகவும் உணவை நன்றாக எடுத்துக் கொண்டுள்ளது அதன் உடம்பில் காயங்களோ நோய்வாய்ப்பட்டதற்கான அறிகுறிகளே இல்லை இந்த முதலை இனம் உலகிலேயே மிக அரிய வகை உயிரினம் ஒரு ஆண் முதலைக்கு நான்கு பெண் முதலை (தற்போது மூன்று ஆகி விட்டது) என்ற விகிதத்திலேயே உள்ளது நல்ல வேளை இது ஆண் முதலை அல்ல அந்த பகுதியில் உள்ள முதலைகளை அப்புறப்படுத்துவதற்கு நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இந்த முதலை பண்ணையின் நிறுவனர்களில் ஒருவராக எனக்கு இது பெரிய இழப்பு இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார். பிரபல விஞ்ஞானியின் இந்த பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.