ETV Bharat / state

'நடமாடும் கரோனா மையங்கள் அமைக்க சாத்தியக்கூறுகள் இல்லை' - மத்திய அரசு - corona Mobile Testing Centers case

சென்னை: கரோனா பரிசோதனைக்கு நடமாடும் கண்டறிதல் மையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

court
court
author img

By

Published : May 15, 2020, 4:40 PM IST

கரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவந்தாலும், வீடுகள் இல்லாமல் சாலைகளில் வசித்துவரும் பெரும்பாலானோர் இந்தத் தொற்றின் விளைவுகள் குறித்த முழுமையான விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர்.

இவர்கள் மூலமாகக் கரோனா தொற்று வேகமாகப் பரவும் இடர் உள்ளதால், சாலைகளில் வசிப்பவர்களைக் கண்டறிந்து மருத்துவப் பரிசோதனை செய்ய தனிக்குழு அமைக்கக்கோரி திருச்சியைச் சேர்ந்த வழக்குரைஞர் அமல் ஆண்டனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், அனைத்து மாவட்டங்களிலும், நடமாடும் கரோனா கண்டறிதல் மையங்களை அமைக்க வேண்டும் எனவும், தனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 பரிசோதனை செய்ய இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் கட்டணம் வசூலிக்கும் நிலையில், அதனை 500 ரூபாயாக குறைக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய சுகாதாரத் துறையின் மண்டல மூத்த மேலாளர் சார்பில் பதில் மனு தாக்கல்செய்யப்பட்டது.

அதில், கரோனா பரவலைத் தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் அதில், நடமாடும் கரோனா கண்டறிதல் மையங்களை அமைப்பதற்குச் சாத்தியக்கூறுகள் இல்லை எனவும், பொருளாதார ரீதியில் தற்சார்பு பெறாத மக்களுக்குப் பரிசோதனை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழ்நாடு அரசு தாக்கல்செய்த அறிக்கையில், தினந்தோறும் அதிகளவில் மக்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் விளக்கங்களைப் பதிவுசெய்த நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:கரோனா இல்லாத மாவட்டமாக மாறிய கோவை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.