தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்போது ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்களிக்க வரும் வாக்காளர்களிடம், ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என சத்தியப் பிரமாணம் பெற உத்தரவிட வேண்டும் என சூரியா பகவான் தாஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்துக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களிடம் சத்தியப் பிரமாணம் பெறுவது சாத்தியமில்லாதது. இது தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. அது நீதிமன்றத்தின் பணியல்ல. இது குறித்து மனுதாரர் அரசை அணுகலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: உரிய ஆதாரங்களை காட்டி ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் பணத்தை எடுத்துச் செல்லாம்: சென்னை உயர் நீதிமன்றம்