உத்தர பிரதே மாநிலத்தைச் சேர்ந்தவர் வருண் திவாரி (29). இவர் கடந்த அக்டோபர் மாதம் முதல் சென்னை பெரியமேடு கந்தப்பா தெருவில் உள்ள தனியார் விடுதியில் தங்கி பெரம்பூரில் உள்ள தோல் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (பிப்.21) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வருண் திவாரி விடுதியிலேயே தங்கியுள்ளார்.
இரவு வழக்கம் போல் வருண் திவாரிக்கு அவரது தாயார் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அவர் அழைப்பை ஏற்காததால் விடுதியின் உரிமையாளர் ஜாபர் அலிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஜாபர் அலி திவாரியின் அறைக்குச் சென்று கதவை பல முறை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்து பெரியமேடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து அங்கு சென்ற காவல் துறையினர், அறையை உடைத்து உள்ளே சென்று பாத்த போது வருண் திவாரி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
இது தொடர்பாக பெரியமேடு காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பாலியல் சீண்டல்!