ETV Bharat / state

வடகிழக்கு பருவமழை: வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை-அமைச்சர் உதயகுமார் - வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு நடவடிக்கை

வடகிழக்கு பருவமழை தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்திகள், தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரித்துள்ளார்.

Northeast monsoon protection measure Action against the  rumor monger

author img

By

Published : Nov 18, 2020, 2:25 PM IST

சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று (நவ.18) சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்பு அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வடகிழக்கு பருவ மழை பணியை சீரமைக்க நீர் சேமிப்பு, உபரி நீர் வெளியேற்றத்தின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களிலும், மாநகராட்சிகளிலும் பேரிடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பருவமழை தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை சார்பில் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம், அவ்வாறு ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வெள்ள உபரி நீர் வெளியேற்றம் தொடர்பாக அணைகள் மற்றும் ஏரிகளில் நிலவரங்களை பொதுப்பணி துறை உள்பட மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் பிற துறை அதிகாரிகள் கண்காணித்து அரசுக்கு தகவல்களை அளித்து வருகின்றனர்.

அந்தத் தகவல்களின் அடிப்படையில் அரசு தரும் அறிக்கைகள், அறிவிப்புக்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். முழு கொள்ளளவை எட்டிய அணைகளிலிருந்து உபரி நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

ஏரிகளில் தண்ணீர் அதிகளவு வந்தால் அதனை சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்துவருகிறது. வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். எனவே, மழை குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

வடகிழக்கு பருவமழை தொடர்பாக 1 மணி நேரத்திற்கு ஒரு முறை ஆலோசனை நடத்த வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பருவமழை தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் உடனக்குடன் தகவல்களை அளித்துவருகிறது. உயிரிழப்புகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை கேட்கப்பட்டு, அதனடிப்படையில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அப்போது அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.