சமூக வலைதளங்களில் சமீபகாலமாக கடன் தேவைப்படும் நபர்களா... நீங்கள்? உடனடியாக இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து உங்களது சம்பள விவரம் மற்றும் ஆதார் எண் மட்டும் கொடுத்தால் போதும்; வேண்டிய தொகையை கடனாகப் பெறலாம் என்ற விளம்பரம் உலா வருகிறது.
இந்த ஆசைவார்த்தைகளை நம்பி, வங்கிகளுக்கு அலைய வேண்டாமே என நினைத்து பிளே ஸ்டோரில் குறிப்பிட்ட செயலியை பொதுமக்கள் பலர் பதிவிறக்கம் செய்கின்றனர். தங்களது ஆதார் எண், வங்கி விவரங்கள், சம்பள விவரங்களை செயலியில் குறிப்பிட்டபின், வட்டிக்கு 3000 ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுகின்றனர்.
கடன் வழங்கிய பின்பு குறிப்பிட்ட நேரத்தில் வட்டி கொடுக்கவில்லையென்றால், கும்பல் ஒன்று தங்களது வேலைகளை ஆரம்பிக்கின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் வட்டித்தொகையை செலுத்தவில்லையென்றால், குறிப்பிட்ட நபரின் புகைப்படத்தை கடனாளி என சித்தரித்து தொலைபேசியில் பதியப்பட்ட அனைத்து எண்களுக்கும் அனுப்பிவிடுவோம் என மிரட்ட தொடங்குகின்றனர். இதுமட்டுமில்லாமல் வீட்டிற்கு ஆள் அனுப்பி மிரட்டியும்; அதிகப் பணத்தை வசூலித்தும் வருகின்றனர்.
பெண்கள் கடன் வாங்கினால் ஆபாசமான காணொலிகளை அனுப்பியும், சித்தரித்த புகைப்படங்களைத் தெரிந்தவர்களுக்கு அனுப்பி விடுவதாகவும் அந்தக் கும்பல் மிரட்டி வருவதால், பலர் பயந்து தற்கொலை முடிவும் எடுத்து வருகின்றனர்.
மானத்திற்குப் பயந்து பலர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்காமல் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கடன் வழங்கும் மோசடி செயலியை பதிவிறக்கம் செய்து ஏமாற வேண்டாம் என சமூக வலைதளங்களில் பலர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டும் வருகின்றனர்.
இந்த நிலையில் இது சம்மந்தமாக 'Save them' என்ற தனியார் சைபர் விங் நடத்தி, வரும் பிரவீன் கலைச்செல்வன் என்பவர் சிபிசிஐடி சைபர் விங் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கரோனா காலத்தில் பணப்பற்றாக்குறை ஏற்பட்டு தவிக்கும் பொதுமக்களுக்கு உதவும் வகையில், ஆசைகாட்டி குறிவைத்து மோசடி செய்து வருவதாகவும்; பாதிக்கப்பட்டவர்கள் பலர் தங்களது அமைப்பை அணுகியதாகவும், இதனால் அங்கீகாரம் இல்லாத ஆப்பை ரத்து செய்யக்கோரியும், மிரட்டிப் பணம் பறிக்கும் வடமாநில கும்பலைப் பிடிக்க கோரியும் சைபர் விங், மத்திய அமைச்சகம், ஆர்பிஐயிடம் புகார் அளித்துள்ளதாக பிரவீன் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
ஆன்லைனில் கடன் வாங்கித் தரும் மோசடி கும்பல்! - வடமாநில கும்பல்
சென்னை: செல்போன் செயலி மூலம் கடன் வழங்கும் வடமாநில கும்பல் அதனைத் திருப்பித் தர தாமதப்படுத்தினால் மிரட்டல் விடுத்து வருகிறது.