சென்னை: திருவெற்றியூர் சாத்துமா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் காமராஜரால் திறக்கப்பட்ட கன்னியா குருகுலம் பள்ளியில் மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர் கேபிபி சாமியின் சட்டப்பேரவை நிதியிலிருந்து 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய இரண்டு மாடி கட்டடத்தை வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினர் சுதர்சனம், பள்ளி தலைமை ஆசிரியர் இந்துமதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் பேசிய அவர், எட்டு வழிச்சாலைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது, மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து துறைகளும் அரசிற்கு சாதகமாக நடப்பதை உறுதி செய்கின்றன.
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை அளிக்கவேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்தும், மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளின் போராட்டத்தை முன்வைத்து மத்திய அரசு வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: வேளாண் சட்டம்; மோடி உருவபொம்மையை எரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்