ETV Bharat / state

திமுக பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல்! - Nominations filed DMK General Secretary at anna arivalayam

சென்னை: திமுக பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கலுக்கான விண்ணப்ப படிவம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்பட்டது.

திமுக பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு வேட்பு மனுக்கள் தாக்கல்

author img

By

Published : Sep 2, 2020, 3:23 PM IST

திமுக பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக மூத்த தலைவர் க. அன்பழகன் மறைவால் திமுக பொதுச் செயலாளர் பதவி காலியாக உள்ளது. திமுக பொதுச் செயலாளராக, அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் வகித்து வரும் பொருளாளர் பதவிக்கு, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இதற்கான விண்ணப்பங்கள் இன்று (செப்.2) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

திமுக பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு வேட்பு மனுக்கள் தாக்கல்

நாளை (செப்.3) வேட்புமனு தாக்கல் செய்யப்படுகின்றது. செப்டம்பர் நான்காம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். செப்டம்பர் ஐந்தாம் தேதி மதியம் ஒரு மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெறலாம், அன்று மாலை இறுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.

திமுக தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா, பொருளாளர் பதவிக்கான விண்ணப்பத்தை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலுவுக்கு ஆதரவாக வாங்கினார். ஆவடி நாசர், திமுக பொதுச் செயலாளர் பதவிக்கான விண்ணப்பத்தை துரை முருகனுக்கு ஆதரவாகவும், பொருளாளர் பதவிக்கான விண்ணப்பத்தை டி.ஆர். பாலுவிற்கு ஆதரவாகவும் வாங்கினார்.

இதையும் படிங்க: ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி மலரும் - கனிமொழி எம்.பி.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.