ETV Bharat / state

நொச்சிக்குப்பம் குடியிருப்புகள்: மீனவர் அல்லாதோருக்கு ஒதுக்கப்படுவதாக புகார் - வெள்ளை அறிக்கை வெளியிட கோரிக்கை!

author img

By

Published : May 16, 2023, 7:36 PM IST

Updated : May 16, 2023, 9:10 PM IST

சென்னை நொச்சிக்குப்பத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை மீனவர்கள் அல்லாதோருக்கு அதிகாரிகள் ஒதுக்கீடு செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள மீனவ நல சங்கத்தினர், 1,188 வீடுகளையும் மீனவர்களுக்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Fishers
மீனவர்கள் கோரிக்கை
Indian Fisherman Association members press meet

சென்னை: 2004ம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட போது நொச்சிக்குப்பம் பகுதியில் இருந்த மீனவர்களின் குடிசைகள் அனைத்தும் கடுமையாக சேதமடைந்தன. வீடுகளை இழந்த மீனவர்களுக்காக, சுனாமி நிதியில் இருந்து 18,000 குடியிருப்புகள் கட்டித்தருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் துரைப்பாக்கம், கண்ணகி நகர், சோழிங்கநல்லூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரப்பட்டன.

ஆனால் நொச்சிக்குப்பம் மீனவர்கள் முழுமையாக கடல் தொழிலை நம்பி வாழ்ந்ததால், பிற இடங்களுக்கு செல்லவில்லை. இதைத் தொடர்ந்து சாந்தோம் தேவாலயம் பின்பகுதியில் மீனவர்களுக்காக 2,842 தற்காலிக குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. பின்னர் மீனவர்களுக்காக நொச்சிகுப்பம் பகுதியில் 2013 நிரந்தர வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், அந்த எண்ணிக்கை 1,188 ஆக குறைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் அல்லாதோருக்கு அதிகாரிகள் வீடுகளை ஒதுக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய மீனவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜா கூறுகையில், "உலக மக்கள் எங்களுக்கு வழங்கிய சுனாமி நிவாரணம் கிட்டதட்ட ஐந்தாயிரம் கோடி ரூபாய். மீனவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சுனாமி நிதியை பயன்படுத்தி கட்டப்பட்ட 1,960 வீடுகளில் மீனவர்களுக்கு 5 சதவீதம் மட்டும் கொடுத்துவிட்டு, மீதமுள்ள 95 சதவீதம் கூவம் நதிகரையில் இருந்த மக்களுக்கும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கும் ஒதுக்கப்பட்டது .

மேலும் மீனவர்களுக்கு வந்த சுனாமி நிவாரண நிதியை பொது கட்டிடங்கள் கட்டுதல், பாலம் அமைத்தல் போன்ற பணிகளுக்கும் அதிகாரிகள் செலவழித்தனர். ஆனால் மீனவர்களுக்கான சுனாமி நிவாரண நிதியை மீனவர்களுக்கு முழுமையாக செலவிடவில்லை. மீன்வளத்துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மீனவர் சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் பெற்றவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

திருமணமான மீனவர்கள் சாதிச் சான்றிதழ் மூலம் அவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்வதுடன், திருமணமான நொச்சிக்குப்பம் மீனவ மகளிருக்கும் இடத்தில் உரிமை உண்டு என்று பெண்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும். தற்போது கட்டிமுடிக்கப்பட்ட 1,188 வீடுகள் முழுவதும் மீன்வளத்துறை மூலம் கணக்கிட்டு நொச்சிக்குப்பம் பூர்வ குடிமக்களாக கருதி, பட்டினவர் சான்றிதழை அடிப்படையாக வைத்து வீடு ஒதுக்க வேண்டும்.

மீனவர்கள் அல்லாதவர்களை சுனாமி நிவாரண நிதியில் கட்டப்பட்ட கண்ணகி நகர், சோழிங்கநல்லூர் பகுதிகளில் உள்ள 18,000 வீடுகளில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடற்கரை பாதுகாப்பு சட்டம் மூலம் கடல் பூர்வீக குடிகள் பாதுகாக்கப்படவேண்டும். நொச்சிக்குப்பம் பகுதிகளில் வாழும் பூர்வ குடிமக்களுக்கு அறநிலைய துறை மூலம் தடையில்லா சான்றிதழ் பெற்று வருவாய்த்துறை மூலம் பட்டா வழங்க வேண்டும். மெரினா லூப் சாலை, மீன் வியாபாரம் மற்றும் 1,188 வீடுகள் வேண்டி போராடிய மீனவர்கள் சூபாரதி கோசுமணி. ஊர் தலைவர் ரூபேஷ்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும். 326 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.

மயிலாப்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் வேலு, மீனவர்கள் இல்லாதவர்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்து வருகிறார். மேலும் அந்தப் பகுதியில் பதற்றத்தை உருவாக்கி வருகிறார். மீனவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் குடியமர்த்தப்பட்டவர்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டும். அந்தப் பகுதியில் உள்ள பிற மக்களை அப்புறப்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களும் அந்தப் பகுதியில் குடியிருந்து வருகின்றனர். எனவே இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன?

Last Updated : May 16, 2023, 9:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.