ETV Bharat / state

வாசிப்பு பழக்கமே இல்லை: வைரலான மநீம வேட்பாளர் விவகாரத்தில் வெங்கடேஷ் ஆறுமுகம் விளக்கம்

"இதுல ஒரு பெரிய காமெடி என்னவென்றால், இந்தப் பதிவை பார்த்துவிட்டு பழனியில் இருக்கும் ஒரு சித்தர் மடத்திலிருந்து என்னை கூப்பிட்டு இதை எங்கேர்ந்து எடுத்திங்க என்று கேட்டார்கள்".

author img

By

Published : Mar 19, 2021, 9:43 PM IST

வாசிப்பு பழக்கமே இல்லை: வைரலான மநீம வேட்பாளர் விவகாரத்தில் வெங்கடேஷ் ஆறுமுகம் விளக்கம்
வாசிப்பு பழக்கமே இல்லை: வைரலான மநீம வேட்பாளர் விவகாரத்தில் வெங்கடேஷ் ஆறுமுகம் விளக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இன்னும் இரண்டு வாரங்களே இருக்கின்றன. இதனால், களத்தில் இருக்கும் கட்சிகள் கோட்டைக்குள் நுழைய வேட்பாளர்களை அறிவித்து, வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். பாசிச பாஜகவை வேரறுப்போம் என்ற முழக்கத்தோடு திமுகவும், திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்று அதிமுகவும் கோதாவில் குதித்துள்ளன.

அதேசமயம், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் ரேஸில் இருக்கின்றன. மக்கள் நீதி மய்யமும் தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி, மதுரவாயல் சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பத்மப்ரியா களமிறக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். பத்மப்ரியா இஐஏ குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வைரலானவர்.

பத்மப்ரியா
பத்மப்ரியா

இதற்கிடையே, தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நகைச்சுவை நிகழ்ச்சியின் வெற்றியாளர் வெங்கடேஷ் ஆறுமுகம் கடந்த ஆண்டு கரோனா காலக்கட்டத்தில் தனது முகநூல் பக்கத்தில், கிமு 400ஆம் நூற்றாண்டில் கரோனா குறித்து சித்தர் போகர் எழுதிய பாடல் என்று,

“சரவணனடி வாழ் அரவும்

விடப்பற் கொண்டு நெளியும்

வெட்டியதை புசிப்பவர் தம்

உடலில் சுவாசம் திணறும்

ரோகம் சேரும் சர்வ நாசம் நேரும்

உடற் மண்டலம் சிதைந்து

உயிர் போகுமே பறந்து” எனக் கிண்டலாக பதிவிட்டிருந்தார்.

முகநூல் பதிவு
முகநூல் பதிவு

இதனைப் பார்த்த தற்போதைய மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மப்ரியா, வெங்கடேஷ் ஆறுமுகத்தின் பதிவை, சித்தர் போகர் எழுதியதுதான் என நினைத்து அதை வாசித்து வீடியோவாக வெளியிட்டிருந்தார். இந்நிலையில், மக்கள் நீதி மய்ய வேட்பாளராக பத்மப்ரியா களமிறங்கியதை அடுத்து அவரின் அந்த வீடியோவை மீண்டும் வைரலாக்கி, இவர் ஒரு கட்சியின் வேட்பாளரா என ஒரு தரப்பு விமர்சனம் செய்துவருகிறது.

வெங்கடேஷ் ஆறுமுகம்
வெங்கடேஷ் ஆறுமுகம்

இதுகுறித்துப் பேசிய வெங்கடேஷ் ஆறுமுகம், “நான் ஒரு நகைச்சுவைக் கலைஞன். தொலைக்காட்சிகளில் ஏராளமான நிகழ்ச்சிகள் செய்துள்ளேன். பல வெளிநாடுகளுக்கும் சென்று வந்துள்ளேன். இதுபோன்று நான் எழுதியதற்கு காரணம் வதந்தி பரப்புவதற்காக அல்ல. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நேர் மேலே செல்லும் போது செயற்கைக் கோள்கள் நின்று செல்கின்றன என்ற வதந்தி பரவியது. இதனையடுத்து “நாசா வியந்தது மீனாட்சி அம்மன் கோயில்” என்று சமூக வலைதளங்களில் முதல்முதலாக கிண்டலாக எழுத ஆரம்பித்தேன்.

நான் பேராசிரியர் ஞானசம்பந்தத்தின் மாணவன் என்பதால் எனக்கு தமிழில் “பா” எழுதத் தெரியும். கரோனா காலத்தில், அகத்தியர் எழுதிய பாடல் என்று ஒன்று பரவியது. இதைப் பார்த்த நான், அகத்தியர் காலத்துல இது ஏது என்று நினைத்து அதை கிண்டல் செய்வதற்காகவே போகர் எழுதியதாக முகநூலில் இந்த பாடலைப் பதிவிட்டேன். போகர் சீனா போனதெல்லாம் உண்மைதான். இதுல ஒரு பெரிய காமெடி என்னவென்றால், இந்தப் பதிவை பார்த்துவிட்டு பழனியில் இருக்கும் ஒரு சித்தர் மடத்திலிருந்து என்னை கூப்பிட்டு இதை எங்கேர்ந்து எடுத்திங்க என்று கேட்டார்கள். அவர்களிடம், இது நானே எழுதுனதுனு சொல்லி கையெடுத்து கும்பிட்டேன்.

முகநூல் பதிவு
முகநூல் பதிவு

ஒரு கட்சியின் வேட்பாளர் இந்தப் பாடலை அபிநயம் செய்ததால் மீண்டும் இது வைரலாகியுள்ளது என்றவரிடம், பத்மப்ரியா இந்த விஷயத்தால் விமர்சிக்கப்படுவது குறித்து கேட்டோம், நான் நல்ல விஷயங்கள் நிறைய பண்ணிருக்கேன். இதை தெரியாம பண்ணிட்டேன் என்று பத்மப்ரியாவே சொல்கிறார். இந்தப் பாடலை பார்க்கும்போது இது பொய்யாக இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தேன். அதனால் அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டேன். அதை ஆராய எனக்கு தோன்றவில்லை என அவர் கூறுகிறார். நன்றாக பேசும் ஒருவர்தான் நல்ல நிர்வாகத் திறன் உடையவர் என்ற அர்த்தமில்லை. அதனால் பத்மப்ரியாவை இதில் ட்ரோல் செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்றார்.

வெங்கடேஷ் ஆறுமுகம்
வெங்கடேஷ் ஆறுமுகம்

மேலும் பேசிய அவர், இந்தத் தலைமுறையிடம் வாசிப்பு பழக்கம் என்பது ஒன்றே இல்லை. சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை நம்பி அப்படியே பரப்பும் மனநிலை இருக்கிறது. பாண்டியர் காலத்தில் சூரியனுக்கு ராக்கெட் விடப்பட்டது என்று சர்க்காஸ்டிக்காக எழுதியிருந்தேன். அதை ஒருவர் எடுத்து அவரது பெயரில் பிரபல நாளிதழுக்கு அனுப்பியிருக்கிறார். அது அப்படியே பிரசுரமாகியிருந்தது. ஒரு செய்தியை எழுதுவதற்கு முன் அந்த செய்தியின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள வேண்டும்” என்று முடித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.