தொழில் துறையினர், தகவல் தொழில்நுட்பத் துறையினர், உணவகம், சுற்றுலாத் துறையினர், திரைத் துறையினர், சட்டப் பணிகளுக்காகப் பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு வந்து 72 மணி நேரத்திற்குள் திரும்புவோருக்குத் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளும் தனிமைப்படுத்தல் நடைமுறையைப் பின்பற்றத் தேவையில்லை எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தொழில் துறைக்கும், பொருளாதாரத்திற்கும் ஊக்கம் அளிக்கும்வகையில் விரிவான ஆய்வுக்குப் பின்பு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்காட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர், தொழில்ரீதியாக ஆந்திரா, பெங்களூருவிலிருந்து வருபவர்களுக்கு சென்னைக்கு இ-பாஸ் வழங்கி தனிமைப்படுத்திக் கொள்ளும் விதியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கைவைக்கப்பட்டிருந்தது.
இதனைப் பரிசீலித்த தமிழ்நாடு அரசு தற்காலிகமாகத் தங்கிச் செல்லும் அனைத்துவிதமான வணிகப் பயணிகளுக்கும் தனிமைப்படுத்தும் விதியிலிருந்து தளர்வை அறிவித்துள்ளது.