இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டிலுள்ள 24 ஆய்வகங்களில் 5 லட்சத்து 31 ஆயிரத்து 295 பேருக்கு சளி, ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில், 28 ஆயிரத்து 694 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 684 பேருக்கு கரோனா பரிசோதனை நடைபெற்றுவருகிறது. இதன் தொடர்ச்சியாக 14 ஆயிரத்து 968 நபர்களுக்கு சளி பரிசோதனை செய்ததில், தமிழ்நாட்டில் மட்டும் இன்று ஆயிரத்து 438 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் 12 ஆயிரத்து 697 பேருக்கு கரோனா சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இன்று தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 861 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு திரும்பிய நிலையில், தமிழ்நாட்டில், இதுவரை 15 ஆயிரத்து 762 பேர் பூரண குணமடைந்துள்ளனர். கரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் உயிரிழப்பின் எண்ணிக்கை 232ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கரோனாவால் 19 ஆயிரத்து 826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 9 ஆயிரத்து 437 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 178 பேர் இறந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கரோனா பாதிப்பு
சென்னை: 19,826
செங்கல்பட்டு: 1,624
திருவள்ளூர்: 1,191
திருவண்ணாமலை: 483
காஞ்சிபுரம்: 483
கடலூர்: 474
திருநெல்வேலி: 382
அரியலூர்: 374
விழுப்புரம்: 363
தூத்துக்குடி: 306
மதுரை: 291
கள்ளக்குறிச்சி: 264
சேலம்: 214
கோயம்புத்தூர்: 155
திண்டுக்கல்: 151
பெரம்பலூர்: 143
விருதுநகர்: 143
தேனி: 121
ராணிப்பேட்டை: 120
திருப்பூர்: 114
திருச்சி: 112
தஞ்சாவூர்: 104
தென்காசி: 98
ராமநாதபுரம்: 93
நாமக்கல்: 85
கரூர்: 83
கன்னியாகுமரி: 77
ஈரோடு: 72
நாகப்பட்டினம்: 71
திருவாரூர்: 55
வேலூர்: 53
திருப்பத்தூர்: 37
சிவகங்கை: 34
புதுக்கோட்டை: 33
கிருஷ்ணகிரி: 29
நீலகிரி: 14
தருமபுரி: 10
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 120
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 35
ரயில் மூலம் வந்தவர்கள் 257
12 வயதிற்குள் 1571 குழந்தைகளும், 13 முதல் 60 வயதிற்குள் 24 ஆயிரத்து 211 நபர்களும், 2912 அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களை தவிர அனைத்து மாவட்டங்களிலும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஜூன் 4ஆம் தேதிவரை வருகை தந்த ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 562 நபர்களில் 1773 கரோனோ வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். விமானங்களில் வருகைபுரிந்த 3,234 பயணிகளில் 59 பேருக்கு நோய்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.