ETV Bharat / state

இனி 9,10 ஆம் வகுப்பிற்கு தொழிற்கல்வி பாடம் கிடையாது - பள்ளிக்கல்வித்துறை தகவல்! - Vocational courses in 10 std

வரும் கல்வியாண்டில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பிற்கு தொழிற்கல்வி பாடம் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இனி 9,10 ஆம் வகுப்பிற்கு தொழிற்கல்வி பாடம் கிடையாது - கல்வித்துறை தகவல்!

author img

By

Published : May 31, 2022, 12:10 PM IST

சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பல ஆண்டுகளாக அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பிற்கு தொழிற்கல்வி பாடத்திட்டம், முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் அறிமுகம் செய்யப்பட்டது. 2019 ஆம் ஆண்டு முதல் அறிமுகமான தொழிற்கல்வி பாடத்திட்டம், சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது.

மேலும், பியூட்டிஷியன், தையல் உள்ளிட்ட சில குறிப்பிட்ட பாடப்பிரிவுகள், மாவட்டத்திற்கு இரண்டு முதல் மூன்று அரசு பள்ளிகளில் மட்டும் செயல்படுத்தப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியம், மத்திய அரசின் நிதியில் இருந்து வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் வரும் கல்வியாண்டு 2022 - 2023 முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடத் திட்டம் இடம்பெறாது எனவும், வழக்கம்போல் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மட்டுமே தொழிற்கல்வி பாடத்திட்டங்கள் இடம்பெறும் என்றும் கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏனென்றால், வரும் கல்வியாண்டில் இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்கவில்லை. இதன் காரணமாக 200 க்கும் அதிகமான தொழிற்கல்வி ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிளஸ் 2 வேதியியல் தேர்வில் போனஸ் மதிப்பெண்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.